1. Home
  2. கோலிவுட்

லோகேஷ் யுனிவர்சில் ரஜினி இணைய வாய்ப்பே இல்லையாம்.. இந்த ஒன்றை காரணம் காட்டி கழட்டி விட்ட சம்பவம்

லோகேஷ் யுனிவர்சில் ரஜினி இணைய வாய்ப்பே இல்லையாம்.. இந்த ஒன்றை காரணம் காட்டி கழட்டி  விட்ட சம்பவம்
தன்னுடைய கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்க வேண்டும் என தனது ஆசையை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் ரஜினி.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி இயக்குனராக இருக்கிறார். உண்மையை சொல்ல போனால் இவரது படத்தில் நடிக்க கோலிவுட் ஹீரோக்கள் தவம் கிடக்கிறார்கள். அந்த அளவுக்கு லோகேஷின் சமீபத்திய படமான விக்ரமின் வெற்றி அமைந்துவிட்டது. விஜய் நடித்து கொண்டிருக்கும் லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது .

உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அதே போல் ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட வேண்டும் என ஒரே நோக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறார்.

இதற்கிடையில் ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினியின் அடுத்த பட அறிவிப்பு வரும் முன்னரே, தன்னுடைய கடைசி படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இருக்க வேண்டும் என தனது ஆசையை சூசகமாக தெரிவித்து இருக்கிறார் ரஜினி. ஆனால் லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து படம் பண்ண வாய்ப்பே இல்லை.

இதற்கு காரணம் தளபதி விஜய்யின் லியோ திரைப்படத்திற்கு பிறகு, லோகேஷுக்கு அடுத்தடுத்து கைதி 2 மட்டும் விக்ரம் 2 திரைப்படங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இதை எப்படியோ தெரிந்து கொண்ட ரஜினி, லோகேஷுக்கு 35 கோடி வரை சம்பளம் கொடுக்க முடிவெடுத்து இருக்கிறாராம்.

லோகேஷ் கனகராஜை பொறுத்த வரைக்கும் இதற்கெல்லாம் அசையும் ஆள் இல்லை. படம் அவர் நினைத்தது போல் அமைய வேண்டும் என்று நினைப்பவர். மேலும் ஹீரோ என்றால் கட்டுமஸ்தான உடம்புடனும் , டூப் போடாமல் நடிக்கும் அளவுக்கும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்.

மேலும் லோகேஷை பொறுத்த வரைக்கும் படப்பிடிப்பும் தொடர்ச்சியாக நடக்க வேண்டும் என நினைப்பார். ஆனால் ரஜினியோ ஜெயிலர் படப்பிடிப்பில் ஓய்வு வேண்டும், இரவில் நடிக்க மாட்டேன் என கண்டிஷன் போட்டு வருகிறார்.. இவரை வைத்து என்ன செய்வது என்பதை வெளிப்படையாக சொல்லாமல் எஸ்கேப் ஆகி வருகிறார் லோகேஷ்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.