லோகேஷ் கனகராஜுக்கு வந்த விபரீத ஆசை.. ஷாக்கிலிருந்து மீளாத ஏஜென்ட் விக்ரம் அண்ட் ரோலக்ஸ்

லோகேஷ் கனகராஜ் கூலி படத்தில் பிஸியாக இருந்தாலும் சூர்யாவின் ரெட்ரோ பட வெற்றியை தொடர்ந்து பெரிய உதவி செய்திருக்கிறார். எல்லா பக்கமும் நல்ல விமர்சனங்களை பெற்று சூர்யாவை இந்த படம் காப்பாற்றியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவை ஜெயிக்க வைத்து விட்டார்.

ரெட்ரோ படத்தில் வேலை செய்த அனைவருக்கும் சூர்யா மற்றும் படக்குழுவினர் சார்பாக மாபெரும் பிரியாணி விருந்து கொடுக்கப்பட்டது. ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து இயக்கிய விக்ரம் படம் வெற்றி விழாவிற்கு பிரியாணி போடப்பட்டது. அதை மாதம்பட்டி ரங்கராஜ் சமைத்து கொடுத்தார்.

இப்பொழுது ரெட்ரோ படத்திற்கும் அதே மாதிரியான பிரியாணி விருந்தை ஏற்பாடு செய்துள்ளனர். இரண்டு மூன்று வேன்களில் பிரியாணி செய்து பட குழுவினருக்கு செம விருந்து கொடுத்துள்ளனர் இடைவிடாத பணியிலும் இந்த நிகழ்ச்சிக்கு வந்த லோகேஷ் கனகராஜ் கொடியசைத்து வேன்களை அனுப்பி வைத்தார்.

அப்பொழுது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். கூலி படம் முடிந்த பிறகு அடுத்து அவர் லைன் அப்பில் கைதி 2, ரோலக்ஸ் போன்ற படங்கள் இருக்கிறதாம். இரண்டு படங்களுமே சூர்யாவிற்கு நல்ல ஒரு பிரேக் கொடுக்கும் படங்களாக அமையும் என்றும் கூறியுள்ளார்

இதுபோக கமலின் விக்ரம் படத்தின் அடுத்த பாகமாகிய விக்ரம் ரிட்டன்ஸ் படத்தையும் எடுக்க உள்ளாராம். அது மட்டும் இன்றி ஹீரோவாக கூட ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாம்.. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளனர். அப்படி என்றால் விக்ரம் ரிட்டர்ன்ஸ் மற்றும் ரோலக்ஸ் படங்களை இப்போதைக்கு இல்லை. கமல், சூர்யா இருவருக்கும் இந்த விஷயம் ஷாக்காக தான் இருக்கும்