Ajith Kumar: கைக்கு எட்டுனது, வாய்க்கு எட்டல என்று ஒரு பழமொழி சொல்லுவாங்க. அப்படி ஒரு விஷயம் தான் இயக்குனர் மகிழ்திருமேனிக்கு நடந்திருக்கிறது.
பொதுவாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் கிடைப்பது கத்தி மேல் நடப்பது தான்.
சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பை இழந்த மகிழ் திருமேனி!
படம் ஹிட் அடித்தால் டாப் இயக்குனர்களின் வரிசையில் வந்துவிடலாம். அதே நேரத்தில் சற்று பிசகினாலும் கேரியர் மீண்டும் தலை எடுக்க தடுமாற வேண்டி வரும்.
அப்படி ஒரு தடுமாற்றம் மகிழ் திருமேனிக்கு விடாமுயற்சி படம் மூலம் நடந்திருக்கிறது விடாமுயற்சி படப்பிடிப்பு சமயத்தில் மகிழ் திருமேனி பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனுக்கு கதை ஒன்றை சொல்லி இருக்கிறார்.
அவருக்கும் கதை பிடித்து விட இணைந்து பணியாற்றுவதற்கு ஓகே சொல்லி இருக்கிறார். ஆனால் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆன பிறகு அமிதாப்பச்சன் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையாம்.
மேலும் மகிழ் திருமேனியால் அவரை தொடர்பு கொள்ள கூட முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. படத்தின் மீதான கலவையான விமர்சனம் தான் இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
மேலும் படம் ரிலீஸ் ஆகி ஒன்றிரண்டு மாதங்களில் குட் பேட் அக்லி ரிலீஸ் ஆகி பெரிய அளவில் ரீச் அடைந்தது. இதனால் ஒட்டுமொத்த வரவேற்பும் ஆதிக் ரவி சந்திரனுக்கு கிடைத்துவிட மகிழ் திருமேனி அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.