10 தலைமுறைக்கு சொத்து சேர்த்த மணிரத்னம்.. டபுள் மடங்காக்க கோலிவுட் அம்பானியாக செய்யும் ராஜதந்திரம்

Director Manirathnam Networth: தனக்கென ஒரு ட்ரெண்டை உருவாக்கியுள்ள மணிரத்தினம் பொன்னியின் செல்வன் மூலம் சில சர்ச்சைகளுக்கும் ஆளானார். ஆனால் அதையெல்லாம் ஈசியாக கடந்து செல்லும் இவர் தற்போது உலக நாயகனை வைத்து தக் லைஃப் படத்தை ஆரம்பித்துள்ளார்.

இதற்கான வேலைகள் அனைத்தும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இவருடைய மொத்த சொத்து மதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏகப்பட்ட அசையும், அசையா சொத்துக்களை வைத்திருக்கும் இவர் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தன் மனைவியுடன் சேர்ந்து நடத்தி வருகிறார்.

அதன் மூலம் பொன்னியின் செல்வன் படத்தை லைக்காவுடன் இணைந்து இவர் தயாரித்திருந்தார். அதன் லாபமே பல கோடியாகும் அதன் அடிப்படையில் தற்போது வரை இவருடைய சொத்து மதிப்பு என்று பார்த்தால் அது 1200 கோடியாக இருக்கிறது. அடேங்கப்பா பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிறாரே என்று தான் இதை பார்த்தால் நமக்கு தோன்றுகிறது.

ஆனால் மணிரத்னம் இந்த சொத்தை டபுள் மடங்காக்கும் வேலையிலும் தற்போது இறங்கியுள்ளார். இப்போது சினிமாவில் பிஸியாக இருக்கும் இவருக்கு இதை கவனிப்பதில் கொஞ்சம் சிரமம் தான். அதனாலேயே அவர் இந்த சொத்துக்களை மும்பையில் உள்ள மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் பராமரிப்பில் விட்டிருக்கிறாராம்.

அவர்கள் இந்த பணத்தை எங்கெங்கு முதலீடு செய்யலாம் எப்படி எல்லாம் பன்மடங்காக பெருக்கலாம் என்பதை பார்த்துக் கொள்வார்களாம். பொதுவாகவே மணிரத்தினம் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் நேர்மையாக இருப்பார்.

அதன்படி இந்த சொத்துக்களுக்கும் அவர் சரியான வரி கட்டி கணக்குகளையும் பக்கவாக வைத்திருக்கிறார். அதனாலேயே இதை சரியாக பராமரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருக்கிறார். ஆக மொத்தம் ரஜினியை ஓவர் டேக் செய்து சொத்து சேர்த்து வைத்திருக்கும் இவர்தான் நம்ம கோலிவுட் அம்பானி என்பதில் சந்தேகம் இல்லை.