1. Home
  2. கோலிவுட்

விவாகரத்து சர்ச்சையே முடியல, ஹீரோவுக்கு நச்சுன்னு முத்தமிட்ட சுவாதி.. முகம் சுளிக்க வைத்த புகைப்படம்

விவாகரத்து சர்ச்சையே முடியல, ஹீரோவுக்கு நச்சுன்னு முத்தமிட்ட சுவாதி.. முகம் சுளிக்க வைத்த புகைப்படம்
பொது இடத்தில் முத்தம் கொடுத்து முகம் சுளிக்க வைத்த சுவாதி.

Actress Swathi: பொது இடங்களில் நடிகைகள் கொஞ்சம் கவனமாகவே இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் சாதாரணமாக செய்யும் ஒரு விஷயம் கூட பெரிய அளவில் சர்ச்சையாக மாறிவிடும். இப்படி இருக்கும் சூழலில் சுப்ரமணியபுரம் ஹீரோயின் சுவாதி மேடையிலேயே ஹீரோவுக்கு முத்தம் கொடுத்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வந்த இவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு விகாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து வெளிநாட்டில் செட்டிலான இவர் தற்போது மீண்டும் ஹைதராபாத்துக்கே வந்துவிட்டார்.

இது பலவிதமாக பேசப்பட்ட நிலையில் சோசியல் மீடியாவில் தன் திருமண புகைப்படங்களை இவர் நீக்கியதும் பல யூகங்களுக்கு வழிவகுத்தது. ஆனாலும் இவர் தன்னுடைய விவாகரத்து குறித்து எந்த விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை. இந்த சூழலில் நேற்று இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் மந்த் ஆஃப் மது படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் சுவாதியிடம் ஒரு நிருபர் உங்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அவர் பதில் அளிக்க முடியாது என்று தைரியமாக கூறியது பலரின் பாராட்டுகளையும் பெற்றது. ஆனால் அடுத்த நிமிடமே இவரை போய் பாராட்டினோமே என்று நொந்து கொள்ளும் அளவுக்கு ஒரு சம்பவத்தை அவர் நிகழ்த்தி விட்டார்.

அதாவது அந்த விழாவில் இளம் ஹீரோ சாய் தரம் தேஜூம் பங்கு பெற்றிருந்தார். மேடையில் பேசிய அவர் சுவாதி படிக்கும் காலத்தில் இருந்தே என்னுடைய நெருங்கிய தோழி. அவருடைய இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று கூறினார். அதைத்தொடர்ந்து சுவாதி அவரை கட்டி அணைத்து கன்னத்தில் நச்சென்று ஒரு முத்தத்தை கொடுத்தார்.

ஹீரோவுக்கு நச்சுன்னு முத்தமிட்ட சுவாதி

விவாகரத்து சர்ச்சையே முடியல, ஹீரோவுக்கு நச்சுன்னு முத்தமிட்ட சுவாதி.. முகம் சுளிக்க வைத்த புகைப்படம்
swathi-kiss-to-sai-tej-1

அந்த போட்டோ தான் இப்போது அடுத்த சர்ச்சைக்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது. பொது இடத்தில் இப்படியா முகம் சுளிக்க வைக்கும் அளவுக்கு நடந்துக்குவீங்க என்று அவருக்கு எதிராக கமெண்ட்டுகளும் பறந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஒரு பிரச்சனை சுற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த முத்த போட்டோவும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.