Sivakarthikeyan, Ayalaan: சிவகார்த்திகேயனின் அயலான் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக இந்த படம் உருவாகி வரும் நிலையில் நிதி பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆகாமல் தடைபட்டது. அதுவும் பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் கால தாமதம் ஆகிக்கொண்டிருந்தது. கண்டிப்பாக நவம்பர் மாதம் அயலான் படம் வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் சிவகார்த்திகேயன் அயலான் படத்திற்கு வாங்கிய சம்பளம் வெளியாகி இருக்கிறது. அதாவது ஹீரோக்களின் சம்பளமும் ஒவ்வொரு படத்திற்கும் ஜெட் வேகத்தில் உயர்ந்திருக்கிறது. அந்த வகையில் ஐந்து வருடத்திற்கு முன்பு சிவகார்த்திகேயன் மார்க்கெட் எப்படி இருந்தது, அதைவிட பல மடங்கு தற்போது உயர்ந்திருக்கிறது.
ஆகையால் அப்போது உள்ள சம்பளத்தை சிவகார்த்திகேயன் வாங்கி இருப்பாரா அல்லது இப்போது உள்ள மார்க்கெட்டுக்கு ஏத்தபடி கேட்டிருப்பாரா என்ற எண்ணம் ரசிகர்களுக்கு இருக்கக்கூடும். ஆனால் அயலான் படத்திற்கு ஒரு ரூபாய் கூட சிவகார்த்திகேயன் சம்பளமாக வாங்கவில்லையாம்.
அதாவது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி போனதற்கு காரணமே பண பிரச்சினை தான். அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்ததற்கு காரணம் இப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் தான் என்று சிவகார்த்திகேயன் கூறியிருக்கிறார். அதாவது அயலான் படத்தை தனக்கு கொடுத்ததற்காகவே அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.
மேலும் இந்த படத்தில் தான் சம்பாதித்த பெரிய சொத்து ரவிக்குமார் சார் தான். கண்டிப்பாக அயலான் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ரவிக்குமார் சாரின் மனைவி அடிக்கடி என்னிடம் அயலான் படம் ரிலீஸ் ஆகுமா என்று சந்தேகத்துடன் கேட்பார்.
அப்போது உங்களுடைய இரண்டாவது குழந்தை ரிலீஸ் ஆவதற்கு முன்பே அயலான் ரிலீஸ் ஆகி விடும் என்று நம்பிக்கை கொடுப்பேன். அதேபோல் ரசிகர்களை விரைவில் படம் சென்றடைய இருக்கிறது என மகிழ்ச்சியுடன் சிவகார்த்திகேயன் பேசுகிறார். இப்படியுமா ஒரு மனுஷன் இருப்பான் என ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன். மேலும் அயலான் டீசர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை மேலும் தூண்டி இருக்கிறது.