1. Home
  2. கோலிவுட்

தனுஷின் நிஜபெயர் என்ன தெரியுமா?. கமல் படத்தால் பெயரை மாற்றிக் கொண்ட நடிப்பு அசுரன்

தனுஷின் நிஜபெயர் என்ன தெரியுமா?. கமல் படத்தால் பெயரை மாற்றிக் கொண்ட நடிப்பு அசுரன்
கமல் படத்தில் இடம் பெற்ற பெயரை வைத்துக்கொண்ட தனுஷ்.

தனுஷ் தனது தந்தை கஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆனால் அந்த படம் வெளியான போது ரசிகர்களால் கேலி, கிண்டல் செய்யப்பட்டார். இவரெல்லாம் ஹீரோவா என ரசிகர்கள் விமர்சனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்பு தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழ் நடிகர்கள் செய்யாத பல விஷயங்களை தனுஷ் செய்து வருகிறார்.

அதாவது தனுஷ் தேசிய விருது வாங்கியது மட்டுமல்லாமல், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவ்வாறு இமாலய வளர்ச்சி பெற்ற இந்த நடிப்பு அரக்கனின் இயற்பெயர் தனுஷ் இல்லை. அதாவது கஸ்தூரிராஜா வைத்த பெயர் வெங்கட் பிரபு.

அப்போது தனுஷ் சினிமாவில் நடிக்கலாம் என்று முடிவெடுத்த போது கங்கை அமரன் மகன் வெங்கட் பிரபு சினிமாவில் இருந்தார். இதனால் மற்றொரு வெங்கட் பிரபு சினிமாவில் வேண்டாம், வேறு பெயரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவெடுத்திருந்தனர். அப்போதுதான் கமலின் குருதிப்புனல் படத்தை தனுஷ் பார்த்திருந்தார்.

இந்த படத்தில் எதிர் அணியில் உளவு பார்க்கும் தனுஷின் கதாபாத்திரம் வெங்கட் பிரபுவுக்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதனால் தந்தை கஸ்தூரி ராஜாவின் ஒப்புதல் உடன் தன்னுடைய முதல் படத்திலேயே தனுஷ் என்ற பெயரில் நடிகராக அறிமுகமானார். இப்போது வரை தனுஷ் என்ற பெயரை அவருக்கு நிலைத்திருக்கிறது.

மேலும் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படம் சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய காலகட்ட படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில் தனுஷ் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தனுஷ் ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.