எதிர்நீச்சல் ஜனனி மூளைக்கு எட்டிய தீப்பொறி.. குணசேகரனுக்கு பேய் ஓட்ட நால்வரும் போடும் ஸ்கெட்ச்

எதிர்நீச்சல் இரண்டாம் பாகத்தில் குணசேகரன் இரண்டு குறிக்கோள்களோடு திரிகிறார். ஒன்று வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் பழையபடி அடுப்பாங்கரையில் அடைப்பது. மற்றொன்று ஜனனியை வீட்டை விட்டு துரத்தி விட்டு சக்திக்கு மறுமணம் செய்வது. அதற்கு உண்டான சைக்கோ வேலைகளை ஆரம்பித்து விட்டார்.

முதல் கட்டமாக மருமகள்கள் வேலைக்கு செல்வதை அவரும், அவரது தாயார் விசாலாட்சியும் சேர்ந்து தடுத்து வருகிறார்கள். உடம்பு சரியில்லை, உதவி வேண்டும் என்ற அடிப்படையில் விசாலாட்சி வீட்டு மருமகளுக்கு டார்ச்சர் கொடுத்து வருகிறார். குணசேகரன் நல்லவர் போல் நடித்து இதற்கெல்லாம் மாஸ்டர் மைண்டாக இருக்கிறார்.

குணசேகரன் எதற்கெடுத்தாலும், “அவர்களை கேட்பதற்கு நாம் யார்” என்ற தோரணையில் பேசுகிறார். அவர்கள் இஷ்டப்படி அவர்கள் வாழ வேண்டும் என்று தம்பிகளிடம் கூறிவிட்டு பின்னால் குழி தோண்டுகிறார். இவர் திட்டம் எதுவும் தம்பிகளுக்கு பிடிப்படவில்லை. குணசேகரன் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார்.

அடுத்த கட்டமாக குணசேகரன் தனக்கு அடிபட்டு உடம்பு நோகுவது போல் நடிப்பை அரங்கேற்ற உள்ளார். அதன்படி பாத்ரூமில் வழுக்கி விழுவது போல் நடிக்கப் போகிறார். இதனால் அவருடைய ரூம் பாத்ரூமில் தண்ணீர் வராமல் செய்வதற்காக தண்ணீர் குழாய்கள் அனைத்தையும் அடைத்து வைக்கிறார்.

பொதுவான பாத்ரூமை பயன்படுத்திவிட்டு இன்று அடிபடுவது போல் நாடகத்தை அரங்கேற்ற உள்ளார். இதை ஜனனி சுதாரித்துக் கொள்கிறார். ஏன் மற்ற பைப்பில் தண்ணீர் வரவில்லை என பணியாளர்களிடம் கேட்டதற்கு, அவர்கள் குணசேகரன் தான் தண்ணீரை அடைத்து விட்டார் என கூறுகிறார்கள். இதனால் அவரது சூழ்ச்சி ஜனனிக்கு தெரிய வருகிறது. உடனே சென்று அக்காள்களிடம் கூறி சூழ்ச்சி நாடகத்தை அம்பலப்படுத்துகிறார். .