திருமணத்திற்குப் பின் கமலஹாசனுடன் நடிக்க மறுத்த நடிகை.. இப்ப ராகவா லாரன்ஸுடன் ஜோடி

2005ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசுவின் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி, தமிழ் சினிமாவின் பிரமாண்டமான வெற்றி பெற்ற திரைப்படம் என்ற பெருமையை பெற்றிருந்தது.

இதனிடையே இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்காக பி.வாசு மும்முரமாக படப்பிடிப்பில் இறங்கியுள்ள நிலையில், அண்மையில் சந்திரமுகி 2 திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது. ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் இத்திரைப்படத்தில் லக்ஷ்மி மேனன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட ஐந்து நடிகைகள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இதனிடையே நடிகை காஜல் அகர்வால் சந்திரமுகி 2 திரைப்படத்தில் ஆறாவது நடிகையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். திருமணத்திற்குப் பின்பு குழந்தை பெற்றுக் கொண்ட காஜல் அகர்வால் அதன்பின் முதன்முதலாக சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே காஜல்அகர்வால், உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன்2 திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்த நிலையில்,இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல வருடங்கள் பாதியில் நின்றதால், காஜல் அகர்வால் அப்படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

இந்தியன் 2 திரைப்படத்திலிருந்து காஜல் அகர்வால் விலகிய போது, இனி திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என பலரும் கூறி வந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் காஜல் அகர்வால் ராகவா லாரன்ஸுடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்க உள்ளது பலரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கியுள்ளது.

இதனிடையே நடிகை காஜல் அகர்வால், கமலஹாசனுடன் நடிக்க விருப்பம் இல்லாததால் தான் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க மறுத்து விட்டார் என்ற செய்தியும் அண்மையில் பரவி வருகிறது. கமலஹாசனுடன் பல நடிகைகள் நடிக்க தயங்கி வருவது இன்னும் தொடர்கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.