தமிழ் சினிமாவில் பல நடிகைகள் தற்போது பல்வேறு விதமான பாடங்கள் நடித்து வருகின்றன. அப்படி வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடித்துள்ள நடிகைகளில் ஒருவர் தான் சனுஷா. இவர் முதன்முதலில் விக்ரம் நடிப்பில் வெளியான காசி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்.
அதன்பிறகு இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி வெற்றி கண்டார். மற்ற மொழியில் வெற்றி படங்களை கொடுத்த சனுஷாவிற்கு எப்படி அது தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் வேண்டும் என ரொம்ப நாளாக நினைத்துக் கொண்டிருந்தார்.
அப்படி இவருக்கு ரேணிகுண்டா படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் கதையை விட இவருடைய கதாபாத்திரத்தை கேட்டு அசந்துபோய் இப்படத்தில் நடித்துள்ளார். ஆனால் இவர் எதிர்பார்த்தது போலவே தமிழ் ரசிகர்களிடம் பெரிய அளவு பாராட்டை பெற்றார். அதன்பிறகு நாளை நமதே, எத்தன் போன்ற படங்களில் நடித்தார் ஆனால் எந்த படமும் பெரிய அளவு வெற்றி பெறவில்லை

விமலுடன் நடித்த எத்தன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக விமலுக்கும் இவருக்கும் இருக்கும் காமெடி காட்சிகள் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தன.

சனுஷா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சனுஷாவா இவ்வளவு குண்டாக உள்ளார் என பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்தனர். இதனை பார்த்து சனுஷா தற்போது அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அதாவது உங்களது 2 விரல்கள் ஒருவரை சுட்டிக்காட்டும் போது மீதமுள்ள 3 விரல்கள் உங்களை சுட்டிக்காட்டும் என்பது பலருக்கும் தெரியவில்லை என கூறியுள்ளார். அதாவது ஒருவர் அழகாக காட்டிக் கொள்வதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற அவசியமில்லை எனவும் கூறியுள்ளார்.