சிவகார்த்திகேயன் நடித்துக் கொண்டிருக்கும் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கில் நடந்த அடிதடியால் அந்த இடமே ரணகளம் ஆகிவிட்டது. அதுவும் இறுதி கட்ட சண்டை காட்சியில் தான் அந்த சோகமே நடந்து விட்டது.
திருநெல்வேலி, மதுரை என தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பராசக்தி படத்தின் ஷூட்டிங்கை சுதா கங்கரா நடத்திக் கொண்டு வருகிறார். பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடித்த நிலையில் சில சிவகார்த்திகேயன் சண்டை காட்சிகள் மட்டும் மிக பிரம்மாண்டமாக எடுத்து வருகின்றனர்.
துணிவு, விடா முயற்சி, குட் பேட் அக்லி போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக இருந்த சுப்ரீம் சுந்தர்தான் பராசக்தி படத்திற்கும் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.
பராசக்தி படத்தின் சண்டைக் காட்சிகளில் சிவகார்த்திகேயன் டூப் இல்லாமல் அவரே சண்டை போட்டுள்ளார். அப்பொழுது மேலிருந்து கீழே குதிக்கும் பொழுது கை, கால் என இரண்டு இடங்களிலும் அடிபட்டுள்ளது.
அதில் அவருக்கு வலது கையில் சுளுக்கு ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு அன்றைய நாள் சூட்டிங் முடித்துவிட்டார் சிவகார்த்திகேயன்.
ஆனால் இதற்கு மேல் நடிக்க முடியாது எனவும் ஒரு வாரமாவது பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டும் எனவும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அதனால் சுதா கொங்கரா படத்தின் மற்ற காட்சிகளை எடுத்து வருகிறார்.