அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 5 ஹீரோயின்களாக.? ஜலஜால கில்லாடியாக இருக்கும் அட்லீ

Allu Arjun : ஷாருக்கானின் ஜவான் வெற்றிக்கு பிறகு அட்லீ அல்லு அர்ஜுனின் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் பட்ஜெட் 700 கோடிக்கு மேல் உள்ளது. சயின்ஸ் பிக்சன் படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக 5 ஹீரோயின்கள் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது இந்த படத்தில் அல்லு அர்ஜுனனின் கதாபாத்திரமே மூன்று விதமாக இருப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகனாக அல்லு அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் வில்லன் வேடத்திலும் அல்லு அர்ஜுன் நடிக்கிறாராம்‌. இது தவிர ஒரு அனிமேஷன் கதாபாத்திரமும் இருக்கிறதாம். இந்த மூன்று மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தன்னை தயாராகிக் கொண்டிருக்கிறார் அல்லு அர்ஜுன்.

அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கும் ஐந்து ஹீரோயின்கள்

ஏற்கனவே இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், தீபிகா படுகோன் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் கமிட்டாகி இருக்கின்றனர். தற்போது கிங்டம் படத்தில் கதாநாயகியாக நடித்த பாக்யஸ்ரீ போர்ஸ் நடிக்கிறார்.

இதுதவிர ஹாலிவுட்டில் இருந்து ஒரு நடிகையை அட்லீ இறக்க உள்ளாராம். இவ்வாறு ஜலஜால கில்லாடியாக அல்லு அர்ஜுனுக்கு ஐந்து கதாநாயகிகளை கமிட் செய்திருக்கிறார். மேலும் இந்த படத்தைப் பற்றிய நிறைய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

அல்லு அர்ஜுன் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதால் அவருக்கு 300 கோடி சம்பளத்தை சன் பிக்சர்ஸ் ஒதுக்கி இருக்கிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால் வேலைகள் படு தீவிரமாக நடந்து வருகிறது.