மே 1 தியேட்டரில் வெளியாகும் 4 படங்கள்.. சம்பவம் செய்ய வரும் ரெட்ரோ

May 1 Release Movies : மே மாதம் முதல் தேதி உழைப்பாளர் தினம் என்பதால் பல புது படங்கள் வெளியாக இருக்கிறது. இந்த வருடம் தொடக்கத்திலேயே விடாமுயற்சி, வீரதீர சூரன், குட் பேட் அக்லி, மதகஜ ராஜா, டிராகன் போன்ற படங்கள் வெளியாகி இருந்தது.

இதில் விரல் விட்டும் என்னும் அளவுக்கு தான் படங்கள் வெற்றியடைந்தது. இந்நிலையில் மே ஒன்றாம் தேதி பெரும் எதிர்பார்ப்பில் நான்கு படங்கள் வெளியாக இருக்கிறது. அவை என்னென்ன படங்கள் என்பதை இப்போது பார்க்கலாம்.

முதலாவதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் ரெட்ரோ படம் வெளியாக உள்ளது. இப்படம் 90ஸ் கேங்ஸ்டர் கதையை கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

மே ஒன்று வெளியாகும் நான்கு படங்கள்

அடுத்ததாக அபிஷாந்த் ஜீவந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியாக உள்ளது. இது ஒரு கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படமாகும்.

அடுத்ததாக தெலுங்கு மற்றும் தமிழில் நானி நடிப்பில் உருவாகி இருக்கும் ஹிட் 3 படம் வெளியாக இருக்கிறது. இதற்கு முந்தைய இரண்டு பாகங்களும் வெற்றி அடைந்ததால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு கூடுதலாக உள்ளது.

தண்டர்போல்ட்ஸ் என்ற ஹாலிவுட் படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் லூயல் புல்மேன், ஃப்லோரன்ஸ் மற்றும் செபஸ்டின் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இவ்வாறு விடுமுறையை கொண்டாட தரமான நான்கு படங்கள் தரையிறங்குகிறது.