இந்த மாதிரி ஒரு சாவு சில்க் ஸ்மிதாவுக்கு வந்திருக்கக் கூடாது.. மன வேதனையில் ஓப்பனாக பேசிய கங்கை அமரன்

சினிமாவை ஒருவரால் எவ்வளவு நேசிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு கங்கை அமரன். ஏனென்றால் அவர் இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல பரிமாணங்களை கொண்டுள்ளார். தனக்கு கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் எல்லாவற்றையுமே பயன்படுத்தக்கூடியவர்.

இந்நிலையில் சினிமா பிரபலங்களின் அடுத்தடுத்த மரணம் ரசிகர்கள் மற்றும் திரைதுறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இது பற்றி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த கங்கை அமரன் தன்னை மீள முடியாத துயரில் தள்ளிய மரணங்கள் பற்றி பேசி இருந்தார்.

அதாவது தமிழ் ரசிகர்களை தற்போது வரை கட்டிப் போட்டிருக்கும் பெண்மணி தான் சில்க் ஸ்மிதா. அவர் இறந்து பல வருடங்கள் ஆகியும் இன்னும் அவரது முகம் ரசிகர்கள் மத்தியில் அப்படியே உள்ளது. வினு சக்கரவர்த்தியின் வண்டி சக்கரம் படத்தின் மூலம் அறிமுகமான அவர் கங்கை அமரன் இயக்கத்தில் வெளியான கோழி கூவுது படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

ஆரம்பத்தில் கவர்ச்சி நடிகையாக பார்க்கப்பட்ட சில்க் ஸ்மிதா கோழி கூவுது படத்தில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது குறித்து கங்கை அமரன் இடம் கேட்கும்போது வண்டி சங்கரம் படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தாலும் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் குடும்பப் பெண்ணாக நடித்திருந்தார்.

அதுதான் தனக்கு பிடித்திருந்தது. ஆகையால் கோழி கூவுது படத்தில் புடவையுடன் அவரை நடிக்க வைத்தேன் என்று கூறியிருந்தார். சில்க் ஸ்மிதா மிக நல்ல பெண் என்றும், தன்னை மச்சான் என்று தான் அழைப்பார், படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன் வீட்டுக்கு வந்த என் மனைவியுடன் சமையல் செய்வார். எங்களுடைய குடும்ப தோழி போல் தான் சில்க் ஸ்மிதா பழகி வந்தார்.

ஆனால் ஒரு நாள் திடீரென மருத்துவமனையில் அனாதை பிணமாக கிடைக்கிறார் என்று கேட்டவுடன் எனது மனசு தாங்கவில்லை. எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது என வேதனையுடன் கங்கை அமரன் கூறியிருந்தார். மேலும் இதுபோல நெருங்கிய பிரபலங்களின் மறைவிற்கு சென்றால் அதிலிருந்து மீண்டும் வர என்னால் இயலாது.

சில்க் ஸ்மிதாவின் இறப்புக்கு செல்ல முடியவில்லை என்ற கவலையும் எனது மனதில் இருக்கிறது. அதேபோல் தான் சமீபத்தில் மறைந்த மயில்சாமியும் என்னுடைய நெருங்கிய நண்பர். அவருடைய இறப்புக்கு போகாததற்கும் இதுதான் காரணம் என்று மனம் உருகி கங்கை அமரன் பேசி இருந்தார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →