இறங்கி ஒரு சம்பவம் செய்யணும் தோணுது.. ப்ளூ சட்டை மாறனுடன் கடும் கோபத்தில் கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் ஒரு வெற்றிகரமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். சிம்புவுடன் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் வெந்து தணிந்தது காடு. இப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் சக்சஸ் மீட்டில் பேசிய சிம்பு உருவ கேலி யாரும் செய்ய வேண்டாமென ப்ளூ சட்டை மாறனை மறைமுகமாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தளத்தில் சிம்புவை தாறுமாறாக கலாய்த்து இருந்தார்.

தற்போது சிம்புவை விமர்சித்ததற்காக கௌதம் மேனன் சரியான பதிலடி ப்ளூ சட்டை மாறனுக்கு கொடுத்துள்ளார். அதாவது தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த கௌதம்மேனன் வெந்து தணிந்தது காடு படத்திற்காக 80% நேர்மையான விமர்சனங்கள் வந்துள்ளது

ஆனால் சினிமா விமர்சகர் என்று சொல்லிக்கொண்டு நல்ல படங்களையும் மோசமாக விமர்சித்து வருகிறார்கள். நான் ப்ளூ சட்டை மாறனை பற்றி நான் பேசுகிறேன். அவரது யூடியூப் சேனலுக்கு ஸ்பான்சர் வேண்டுமென்பதற்காக படத்தை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்.

மேலும் தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தின் விமர்சனத்தை பார்க்கும்போது முதல் 10 நிமிடம் படத்தை கழுவி ஊற்றி இருப்பார். நடுவில் ஒருவர் இடத்துல மட்டும் படம் நல்லா இருக்கு என்பது போல விமர்சித்திருந்தார். அதை பார்க்கும் போது இறங்கி ஒரு சம்பவம் செயலான தோணுச்சு என தனது ஆதங்கத்தை கௌதம் மேனன் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

தற்போது கௌதம் மேனனின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்தவுடன் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கௌதம்மேனனை விமர்சித்துள்ளார். அதாவது சாதிப்பெயரை பின்னால் போட்டுக்கொள்வதை விரும்பாத தமிழகத்தில் சாதிய அடையாளத்தை பெருமையாக கருதும் ஒரே இயக்குனர் கௌதம் மேனன் என ப்ளூ சட்டை மாறன் குறிப்பிட்டுள்ளார்.