GOAT படத்தில் விஜய்க்கு தங்கச்சி இவங்க தான்.. வெங்கட் பிரபு வலை வீசி கண்டுபிடித்த நடிகை

Thalapathy Vijay: GOAT படத்துல விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு கூட நடிகை உடனே கிளிக் ஆயிட்டாங்க. ஆனால் அந்த தங்கச்சி கேரக்டருக்கு யாரை நடிக்க வைப்பது என்பது பெரிய போராட்டமாகவே ஆகிவிட்டது. விஜய்க்கு திருப்பாச்சி படத்திலிருந்து சமீபத்தில் ரிலீசான லியோ படம் வரைக்கும் தங்கச்சி சென்டிமென்ட் கதைகள் பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆகிவிடும். இதற்கு முக்கியமான காரணம் அவருடைய தங்கை திவ்யா என்று கூட சொல்லலாம்.

விஜய் சின்ன வயதில் இருக்கும் போது அவருடைய தங்கை திவ்யா உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டதும், அதன் பிறகு தான் விஜய் இவ்வளவு அமைதியாக ஆகிவிட்டார் என்பதும் நிறைய செய்திகளில் கேள்விப்பட்டிருப்போம். இதனாலேயே விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடிக்கும் நடிகைகளிடம் அவருக்கு பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகிவிடும். திருப்பாச்சி மற்றும் கில்லி படங்கள் எல்லாம் இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுகள் கூட.

விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் சினேகா, மீனாட்சி சவுத்ரி, அஜ்மல், பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளங்களோடு உருவாகி வருகிறது. எல்லா கேரக்டர்களையும் டக்கு டக்கு என லாக் செய்த வெங்கட் பிரபு விஜய்க்கு தங்கச்சியாக யாரை நடிக்க வைப்பது என்பதில் ரொம்பவும் குழப்பம் அடைந்து விட்டார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தில் அவருக்கு ஹீரோயின் ஆக நடித்த நடிகை இவானா தான் இந்த படத்தில் விஜய்க்கு தங்கச்சியாக நடிக்க இருக்கிறார் என்று கூட ஓரளவுக்கு உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதில் எதுவும் உண்மை இல்லை இப்போது வரை GOAT பட குழுவினர் விஜயின் தங்கச்சி கேரக்டரில் நடிப்பதற்கு நடிகையை தேடி அலைந்து வருகிறார்கள் என்ற செய்தி சமீபத்தில் வெளியானதை கேள்விப்பட்டிருப்போம்.

இவ்வளவு தூரம் மெனக்கெடும்போதே அந்த தங்கச்சி கேரக்டருக்கு படத்தில் ரொம்பவும் வெயிட்டான கேரக்டர் இருப்பது நன்றாக தெரிகிறது. தற்போது இந்த கேரக்டரில் நடிப்பதற்காக பிரபல ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அபி யுக்தா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவர் ஒரு மாடல் அழகையும் கூட. விஜயுடன் இணைந்து கிட்டத்தட்ட 15 நாட்களாக இவர் ஷூட்டிங்கில் கலந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

விஜய்க்கு தங்கச்சி கேரக்டரில் நடிக்கும் அபயுக்தா இந்த படத்தில் பரதநாட்டிய கலைஞராக நடிக்க இருக்கிறார். சின்ன வயதிலேயே அதிக புத்திசாலித்தனம் நிறைந்த பெண்ணாகவும், விஜய்க்கு வரும் பிரச்சனைகளை கண்டறிந்து எப்படி அவர் உதவுகிறார் என்பதும் தான் அந்த கேரக்டரின் தன்மை என்றும் சொல்லப்படுகிறது. இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகலாம்.