அஜித் குமார் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸை தெறிக்கவிட்டுள்ளது. அவரது ரசிகர்களுக்கு சரியான விருந்தாக இந்த திரைப்படம் அமைந்துள்ளது. ஏற்கனவே விடாமுயற்சி படத்தினால் துவண்டு போயிருந்த அஜித் இந்த படத்தில் மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
விடாமுயற்சி படம் மொத்தமாய் 40 கோடிகள் வசூலித்தது. ஆனால் குட் பேட் அக்லி படம் முதல் நாளே 40 கோடிகள் வசூலித்து விட்டது. இதனால் அஜித் படங்களிலேயே அதிக வசூலை கொடுத்த படம் என்ற லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது இந்த படம். நாளுக்கு நாள் இந்த படம் மக்களை ஈர்த்து வருவதால் இது 100 கோடிகள் எளிதாக தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் இதுவரை 21 கோடிகள் வசூலித்து உள்ளது. தினந்தோறும் இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்தால் இதுவரை இல்லாத வசூல் சாதனை படைக்கும் என்று ரீதியில் பார்க்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 7 கோடி என்ற அளவில் இந்த படத்தின் கலெக்ஷன் இருந்து வருகிறது.
சமீபத்தில் இரண்டு படங்கள் வசூலித்த சாதனையை இந்த படம் தகர்த்து விடும் என்கிறார்கள். ஒன்று விஜய் நடிப்பில் உருவான கோட் படம், மற்றொன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் படம் என்கிறார்கள். இந்த இரண்டு படங்களுமே ஆரம்பத்தில் நல்ல வசூலை கொடுத்தது. இதில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் 360 கோடிகள் வசூலித்து சாதனை படைத்தது.
இரண்டே நாட்களில் குட் பேட் அக்லி படம் 45 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது . சென்னையில் மட்டும் மொத்தமாக இந்த படம் இதுவரை 950 காட்சிகள் ஒளிபரப்பப்பட்டுள்ளது. விஜய் நடித்த கோட் மற்றும் ரஜினி நடிப்பில் வெளிவந்த வேட்டையன் என இந்த இரண்டு படங்களின் சாதனையை முறியடித்துள்ளது குட் பேட் அக்லி திரைப்படம்.