சூர்யா நடித்து சூப்பர் ஹிட்டான படம் காக்க காக்க. இந்த படத்தில் ஆக்ஷன், காதல் என அனைத்திலும் வெளுத்து வாங்கி இருப்பார். இப்படத்திற்கு முன் எவ்வளவு படங்கள் நடித்திருந்தாலும் சூர்யாவிற்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்களில் முக்கியமான படம் காக்க காக்க. இப்படம் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
சூர்யாவிற்கு இப்படம் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த வளர்ச்சியை வைத்துக்கொண்டு அவர் மேலும் தன் திறமைகளை வைத்தே முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்தார். தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
தற்போது அதற்கான வேலையில் கௌதம் மேனன் ஈடுபட்டு வருகிறார். மீண்டும் உருவாக இருக்கும் இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார். ஆனாலும் இந்த படத்தில் ஒரு சிக்கல் இருந்து வருகிறது. அது தான் பாண்டி கேரக்டர். ஏனென்றால் இதன் முதல் பாகத்தில் பாண்டி கேரக்டர் இறந்துவிட்டதாக அனைவருக்குமே தெரியும்.
இந்நிலையில் இதன் கதாபாத்திரத்தை எப்படி இரண்டாம் பாகத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இப்படத்தில் சூர்யாவிற்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் பாண்டி என்ற கேரக்டரில் ஜீவன் நடித்திருப்பார்.
இவரின் கதாபாத்திரமும் பெரிய அளவில் ரசிகர்களுக்கு இடையே பேசப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பிறகு சில படங்களில் நடிகராக நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் அந்தப் படங்கள் அவருக்குப் பெரிதும் கை கொடுக்கவில்லை. அதனால் அவர் இப்போது சினிமா துறையை விட்டு பிஸ்னஸ் செய்ய ஆரம்பித்துதுள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக படக்குழு தற்போது புது முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதாவது இந்த படத்தில் ஜீவனை மிஞ்சும் அளவுக்கு ஒரு நடிகர் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த முக்கிய படங்களில் நடிகராகவும், வில்லனாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. தற்போது பாண்டிவிற்கு பதிலாக வில்லன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளதாக தெரிய வருகிறது. அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் இவரின் வில்லத்தனமான நடிப்பு இந்த படத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.