1. Home
  2. கோலிவுட்

காப்பி அடித்ததை கண்டுபிடிச்சிட்டீங்களே.. பயந்து GV பிரகாஷ் செய்த மட்டமான வேலை!


தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராக உள்ள ஜிவி பிரகாஷ், சமீபத்தில் வெளியான மீம்ஸ் ஒன்றை பார்த்து காண்டாகி தனது சமூக வலைத்தள பக்கத்தை முடக்கி உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. 2008ஆம் ஆண்டு வெளியான வெயில் திரைப்படத்தில் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜிவி பிரகாஷ். அதன்பின் மதராசபட்டினம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு இசை அமைத்திருந்தார். இதனிடையே 2015ஆம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தற்போது இசையமைத்து வரும் நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தை முடக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். இதனிடையே சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் ஒரு மீம்ஸ் ஒன்று வைரலாகி வருகிறது. அதில் குருஷேத்திரம் திரைப்படத்தில் இடம்பெற்ற நகைசுவை நடிகர் வடிவேலு தன் திருமணத்திற்கு சொம்பில் தண்ணி கேட்கும் போது அது நான்கு பேரிடம் மாறும் போது ஒரு கலவரமே நடக்கும். அந்த வீடியோ பதிவை வைத்து நெட்டிசன்கள், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் மெட்டை காப்பி அடித்து அதனை ஹாரிஸ் ஜெயராஜ் மஜ்னு திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதைத்தொடர்ந்து யுவன்சங்கர் ராஜா ராம் படத்திலும், ஜிவி பிரகாஷ் ஆடுகளம் திரைப்படத்திலும் ஒரே மெட்டை வேறு வேறு இசைக்கருவிகளை வைத்து மாற்றம் செய்திருப்பதை போல அந்த மீம்ஸ் வீடியோ அமைந்திருக்கும். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், இதை பார்த்து காண்டான ஜிவி பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தை சிலமணிநேரம் முடக்கி இருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், பிரகாஷ் அந்த மீம்ஸ்க்கு ரியாக்ட் செய்து, தேவையில்லாமல் தனது ட்விட்டர் பக்கத்தை பிளாக் செய்துள்ளதாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். ஆனால் தற்போது அவரது ட்விட்டர் கணக்கு செயல்பட்டு வரும் நிலையில், வெள்ளை வேட்டி சட்டை அணிந்து மாஸாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். மேலும் இயக்குனர் விவேக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் 13 படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்ட்டரையும் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.