80, 90களில் நாம் பார்த்து வந்த நகைச்சுவை நடிகர்களான விவேக், மயில்சாமி, டிபி கஜேந்திரன் மற்றும் மனோபாலா இவர்களை ஒவ்வொருத்தராக இழந்துவிட்டோம். இவர்களின் இழப்பு சினிமாவில் இருக்கும் பிரபலங்களுக்கு மட்டுமல்ல இவர்களுடைய நகைச்சுவை பார்த்து ரசித்து வந்த நமக்கும் தான். அத்துடன் இவர்கள் செய்த நல்ல விஷயங்கள் இவர்களோடு முடிந்து விடக்கூடாது என்பதற்காக இவர் செய்த ஒவ்வொரு நல்ல விஷயங்களும் ஒவ்வொன்றாக வெளி வருகிறது.
அதில் மனோபாலா இறந்த பிறகு இவர் கூட நடித்த நண்பர்கள் அனைவரும் இவரைப் பற்றி சொல்வது, ஏற்றத்தாழ்வு பார்க்காமல் எல்லாரிடமும் நட்புடன் பழகக் கூடியவர். அத்துடன் இவரை எப்படி கிண்டல் பண்ணாலும் கொஞ்சம் கூட அதை சீரியஸாக எடுத்துக்காமல் நகைச்சுவையாகவே எடுத்து எங்களுடன் இருந்தவர். மேலும் இவர் செய்த உதவியால் சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் பலன் அடைந்திருக்கிறார்கள்.
அதிலும் இவர் மூலமாகத்தான் தற்போது உலக நாயகனாக இருக்கும் கமல் ஹீரோவாக இருப்பதற்கு முக்கிய காரணம். அதாவது கமல் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்து மிகவும் பரிச்சயம் ஆனார். பின்னர் ஒரு கட்டத்தில் வளர்ந்த பிறகு நேரடியாக ஹீரோ சான்ஸ் எந்த படங்களிலும் கிடைக்காமல் இருந்திருக்கிறார்.
அப்பொழுது இவருக்கு கிடைத்த சிறு சிறு வேடங்களில் நடித்துக் கொண்டு மற்றும் நடன இயக்குனருக்கு உதவியாளராக பணியாற்றி வந்திருக்கிறார். அந்த நேரத்தில் மனோபாலா இவரை பார்க்கும் பொழுதெல்லாம் உன்னிடம் நிறைய திறமை இருக்கிறது. அத்துடன் ஹீரோவா ஆவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது. ரசிகர்களை கவரும் வகையில் நீ ரொம்ப அழகா இருக்கிறாய்.
அதனால் நீ டான்ஸ் மட்டும் ஆடிக்கொண்டு இப்படியே உன் காலத்தை ஓட்டி விடாத. இதற்கு மேலேயும் நீ முயற்சி செய்து கதாநாயகனாக வரவேண்டும் என்று கூறி இருக்கிறார். அத்துடன் உனக்கு மிகப்பெரிய எதிர்காலம் சினிமாவில் காத்துக் கொண்டிருக்கிறது. அதனால் வாய்ப்பைத் தேடி நீ கொஞ்சம் கஷ்டப்பட்டால் மட்டும்தான் ஹீரோவாக ஆக முடியும் என்று ஒரு தடவை இல்லை இவரை பார்க்கும் பொழுதெல்லாம் பலமுறை கூறியிருக்கிறார்.
இப்படி எல்லாம் கமல் ஹீரோவாக ஆவதற்கு முன்னாடி இவரை அடிக்கடி மோட்டிவேஷன் செய்து முன்னேற்றிருக்கிறார். கமல் ஹீரோவாவதற்கு ஒரு காரணமாக இருந்த மனோபாலா இறப்பிற்கு எப்படி இவரால் வராமல் இருக்க முடிகிறது என்று சினிமா பிரபலங்களுக்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால் கமல் உடைய தற்போது நிலைமை சவுத் ஆப்பிரிக்காவில் சூட்டிங் இல் இருப்பதால் உடனே வந்து சென்றாலும் உடல் நிலை பாதிக்கப்படும் என்ற பயத்தால் கூட வராமல் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.