1. Home
  2. கோலிவுட்

அடுத்த சார்லி சாப்ளின் இவர்தான்.. நடிப்பை பார்த்து உறைந்து போய் கமல் கொடுத்த பட்டம்

அடுத்த சார்லி சாப்ளின் இவர்தான்.. நடிப்பை பார்த்து உறைந்து போய் கமல் கொடுத்த பட்டம்
கமல், ஒருவரை பார்த்து வியந்து பாராட்டை கொடுத்து இருக்கிறார்.

Actor Kamal: கமலின் நடிப்பையும், வித்தியாசமான கேரக்டரையும், சாதனை படைக்கும் அளவிற்கு படம் கொடுப்பதிலும் இவரை மிஞ்சுவதற்கு யாருமில்லை. பல நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இவருடைய நடிப்பையும் படத்தையும் பார்த்து தான் ரோல் மாடலாக நினைத்து சினிமாவிற்கு நுழைந்திருக்கிறார்கள்.

அத்துடன் கமல் வழியையும் பாலோ பண்ணி வித்தியாசமான படத்தையும் கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கமலிடமிருந்து தான் நடிப்பை கத்துக்கணும் என்று பலரும் சொல்லியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவரை சிவாஜி மற்றும் நாசர் போன்ற ஏகப்பட்ட நடிகர்கள் கமல் நடிப்பில் மிரட்டுவார் என்று அவர்கள் வாயாலேயே கூறி இருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட கமல், ஒருவரை பார்த்து வியந்து பாராட்டை கொடுத்து இருக்கிறார். அத்துடன் அவருடைய காமெடியை பார்ப்பதற்கு சார்லி சாப்ளின் போலவே இருக்கிறது என்று பாராட்டியுள்ளார். அவர் வேறு யாருமில்லை வைகைப்புயல் வடிவேல் தான்.

வடிவேலு நடிப்பில் வெளிவந்த 23ஆம் புலிகேசி படத்தை பார்த்த கமல்ஹாசன் வயிறு குலுங்க சிரித்து கண்ணீர் வடியும் அளவிற்கு மிகவும் நகைச்சுவையாக இருந்திருக்கிறதாம். முக்கியமாக அந்த படத்தில் வரும் ஒரு காட்சியை உரைந்து போய் வியப்பாக பார்த்திருக்கிறார்.

அதாவது சாவித் துவார ஓட்டையை சுற்றி வடிவேலு விளையாடுவதை பார்க்கும் பொழுது அப்படியே அச்சு அசலாக சார்லி சாப்ளினை பார்ப்பது போல இருந்ததாக வடிவேலுவை பாராட்டி இருக்கிறார். அத்துடன் இந்த காலத்து சார்லி சாப்ளின் வடிவேலு தான் என்று ஒரு பெயரையும் அவருக்கு கொடுத்திருக்கிறார்.

கமல்ஹாசனிடம் இருந்து இப்படி ஒரு அங்கீகாரம் கிடைக்குது என்றால் அந்த அளவிற்கு தகுதியானவர்தான் வடிவேலு. எவ்வளவு கவலைகள் இருந்தாலும் இவருடைய நகைச்சுவையும் தோற்றத்தையும் பார்த்தாலே அது அனைத்தையும் மறக்கடிக்கும் வகையில் தான் பெர்பார்மன்ஸ் இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதனால் தான் கமலுக்கும் வடிவேலு சார்லி சாப்ளின் போல் தெரிந்திருக்கிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.