இந்திய அளவில் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கும் தளபதி விஜய், அரசியலிலும் ஈடுபடும் ஆசையில் இருந்தார். அதற்காக விஜய் மக்கள் மன்ற கட்டமைப்பை அரசியல் ரீதியாக வலுப்படுத்த நினைத்து அகில இந்திய விஜய் மக்கள் மன்ற பொறுப்பாளர் பதவியில் இருந்த புஸ்ஸி ஆனந்தை உடன் வைத்திருந்தார். இவர் மீது விஜய் கண்மூடித்தனமாக நம்பிக்கை வைத்துள்ளார்.
ஆனால் அவர் விஜய்க்கு நெருக்கமான சில வருடத்திலேயே தனது சூட்சமத்தை துவங்கி விஜய்க்கு நெருக்கமாக இருப்பவர்களை பிரித்து, பிரித்தாலும் சூழ்ச்சியை கச்சிதமாக கையாண்டார் என்றும் கூறுகின்றனர். மேலும் விஜய்க்கு தன் முலம் தான் எந்த விஷயமும் தெரியவேண்டும் என்பதில் உறுதியாகவும் இருக்கிறார்.
இதற்காக அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் அவர்களையும் நெருங்க விடவில்லை. சொல்லப்போனால் புஸ்ஸி ஆனந்த் தான் விஜய்-எஸ்ஏசி பிரிவுக்கு முழு காரணம் என்றும் சொல்கின்றனர். முதலில் விஜய் மக்கள் மன்றத்தை ஆரம்பித்தது எஸ்ஏசி தான். ஆனால் புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் மன்ற மாநில நிர்வாகி ஆனதும் எஸ்ஏசி-க்கு ஆதரவாக இருக்கும் நிர்வாகிகளை மன்றத்திலிருந்து நீக்கிவிட்டார். அதன் பிறகு தான் எஸ்ஏசி விஜய்க்கு எதிராகவே மாறும் நிலை ஏற்பட்டது.
தற்போது புஸ்ஸி ஆனந்தை விஜய்க்கு நிகராக ரசிகர் மன்ற நிர்வாகிகள் கொண்டாடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்றால், விஜய் மக்கள் மன்றத்தை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளை நீக்குவது சேர்ப்பது பதவி வழங்குவது உள்ளிட்ட எல்லாவற்றையும் விஜய் இடம் கேட்காமல் தன்னிச்சையாகவே முடிவெடுக்கிறார்.
மேலும் விஜய் திரைப்படங்களின் நடிப்பதில் பிஸியாக இருப்பதால், மன்ற செயல்பாடுகளை தேவைக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைத்துக் கொள்ளும் புஸ்ஸி ஆனந்த், தனக்கு கூழ கும்பிடு போட்டு ஜால்ரா அடிக்கும் நிர்வாகிகளுக்கு தான் விஜய் மக்கள் மன்றத்தில் பெரிய பொறுப்பும் கொடுப்பாராம். சிலரிடம் பணம் வாங்கிக் கொண்டும் பதவி வழங்குவதும் உண்டு.
அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய் சமீபத்தில் பனையூரில் நடந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தின் போது, நிகழ்ச்சிகள் அனைவரும் புஸ்ஸி ஆனந்த் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர். அதுமட்டுமின்றி அவர் விஜயை விட ஓவர் கெத்து காட்டினார். இப்படியே போச்சுன்னா கடைசியில் விஜய் மக்கள் மன்றத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கடைசியில் விஜய்க்கு பட்ட நாமம் தான் போட்டு விடுவார் போல தெரிகிறது.