1. Home
  2. கோலிவுட்

லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மகளுடன் இணையும் வாரிசு நடிகர்.. பெரும் பரபரப்பில் பாலிவுட்

லவ் டுடே ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மகளுடன் இணையும் வாரிசு நடிகர்.. பெரும் பரபரப்பில் பாலிவுட்
தமிழில் சூப்பர் ஹிட் ஆன லவ் டுடே படத்தை ஹிந்தியில் ரீமிக் செய்வதுடன், அந்த படத்தில் ஸ்ரீதேவியின் மகளுடன் பிரபல வாரிசு நடிகர் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் 150 கோடியை அசால்டாக தட்டி தூக்கிய லவ் டுடே திரைப்படம் வசூலில் மட்டுமல்ல, இளசுகளாலும் கொண்டாடக்கூடிய படமாக இருந்தது. இதனால் இந்த படத்தை இப்போது ஹிந்தியில் ரீமிக்ஸ் செய்ய ஆர்வம் காட்டியுள்ளனர்.

இதில் யார் நடிக்கப் போகிறார்கள் என பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது லவ் டுடே படத்தில் ஸ்ரீதேவியின் இளைய மகளுடன் வாரிசு நடிகர் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். லவ் டுடே திரைப்படம் வெளியான பிறகு காதலர்களுக்கிடையே செல்போனை மாற்றிக் கொள்வது ட்ரெண்டானது.

இப்போது ஹிந்தியிலும் ரீமேக் ஆகி பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு கட்டி ரகளை செய்யப்போகிறது. இந்த படத்தின் கதையைக் கேட்ட உடனேயே அதில் இவானா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் ஒத்துக்கொண்டார்.

அதன்பிறகு பிரதீப் ரங்கநாதன் கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானின் மகன் ஜுனைத் நடிக்கவிருக்கிறார். மேலும் ஜுனைத் அமெரிக்காவிற்கு சென்று நடிப்பு குறித்த படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பிய கையோடு ஜோயா அக்தரின் ஆர்ச்சீஸ் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

இந்த படத்தில் குஷி கபூர் மட்டுமல்ல ஷாருக்கானின் மகள் சுஹானா அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா ஆகியோரும் அறிமுகமானவர்கள். ஏற்கனவே குஷி கபூர் உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த பிறகு, தற்போது லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இரண்டாவது முறையாக ஜுனைத் இணைந்து நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கில் ஜுனைத், குஷி கபூர் இருவரும் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.