ஜெய்யால் சரிந்த மார்க்கெட்.. காமெடி நடிகருக்கு ஜோடியான ஹீரோயின்

Actor Jai: ஒரு காலத்தில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த ஜெய் இடையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமானார். அதைத்தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் அவர் எதிர்பார்த்த வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவருடன் காதல், லிவிங் ரிலேஷன்ஷிப் என கிசுகிசுக்கப்பட்டவர் தான் வாணி போஜன். இதற்கு முன்பே அஞ்சலி இவருடன் காதலில் இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளக் கூட பிளான் செய்திருந்தனர்.

ஆனால் சில கருத்து வேறுபாடுகளின் காரணமாக அவர் இப்போது தமிழ் சினிமாவே வேண்டாம் என்று தெலுங்கு பக்கம் சென்று விட்டார். ஆனாலும் அவ்வப்போது சில தமிழ் படங்களில் அவர் நடித்துக் கொண்டு தான் இருக்கிறார். இருப்பினும் அவருக்கான மார்க்கெட் ஸ்டடியாக இல்லை என்பதே உண்மை.

தற்போது அவருடைய நிலையில் தான் வாணி போஜன் இருக்கிறார். ஏற்கனவே ஜெய்யுடன் இவருக்கு இருந்த காதல் பற்றி வந்த செய்தி இவருக்கான வாய்ப்பை குறைத்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட இந்த சின்னத்திரை நயன்தாரா மறைமுகமாக ட்வீட் போட்டு அதை மறுத்தார்.

இருந்தாலும் இவர் நடித்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. அந்த வகையில் தற்போது அவர் சில படங்களில் நடித்து முடித்து விட்டாலும் அவை இன்னும் வெளிவராமல் இருக்கிறது. இந்த நிலையில் இவர் நடிகர் யோகி பாபு உடன் சட்னி சாம்பார் என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

ராதா மோகன் இயக்கும் இப்படத்தை டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் இணைந்து ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இதற்கான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ள நிலையில் ஜெய்யால் வாணி போஜனின் மார்க்கெட் சரிந்து இப்போது காமெடி நடிகருக்கு ஜோடியாகிவிட்டார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.