1. Home
  2. கோலிவுட்

3 பெயர் மாற்றியும் காணாமல் போன கொழுக் மொழுக் நாயகி.. கிளாமரை நம்பி களமிறங்கிய குஷ்பூ ஜெராக்ஸ்

3 பெயர் மாற்றியும் காணாமல் போன கொழுக் மொழுக் நாயகி.. கிளாமரை நம்பி களமிறங்கிய குஷ்பூ ஜெராக்ஸ்
இந்த ஹீரோயினும் இவருடைய பெயரை மூன்று முறை மாத்திருக்கிறார்.

Disappeared Actress: சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகள் பார்க்க அழகாகவும், கண்ணம் பளபளவென்று, கொழுக் மொழுக்காக இருந்தால் அவர்களை தேடி பட வாய்ப்புகள் குவியும். அதிலும் அவர்கள் கொஞ்சம் தூக்கலான கிளாமரில் நடித்தால் கண்டிப்பாக அவர்கள் முன்னணி ஹீரோயினாக வலம் வருவார்கள்.

ஆனால் ஒரு நடிகைக்கு இத்தனை அம்சங்களும் இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் காணாமல் போய்விட்டார். இதற்காக அவருடைய பெயரைக் கூட மாற்றி விட்டார். பொதுவாக சினிமாவிற்கு வந்துவிட்டாலே ஹீரோயின் பெயரை மாற்றி விடுவார்கள். தங்களுடைய ஸ்டைலுக்கு ஏற்ப ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக  மாடனாக ஒரு பெயரை வைத்து விடுவார்கள்.

அப்படித்தான் இந்த ஹீரோயினும் இவருடைய பெயரை மூன்று முறை மாத்திருக்கிறார். ஆனாலும் இவரால் சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போய்விட்டது. ஆரம்பத்தில் சினிமாவிற்கு நுழைந்த பொழுது இவர் குஷ்பவை போலவே அச்சு அசலாக இருக்கிறார் என்று அனைவரும் கூறி வந்தார்கள்.

பெயருக்கு ஏற்ற மாதிரி குஷ்புவை போல் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் நடித்த இரண்டு, மூன்று படங்களிலே பீல்ட் அவுட் ஆகிவிட்டார். இந்த நடிகை வேற யாரும் இல்லை ஜீவா நடிப்பில் வெளிவந்த ஆசை ஆசையை படத்தில் உள்ள ஹீரோயின் ஷர்மிலி தான்.

இவருடைய உண்மையான பெயர் மரியா. அதன் பின் சினிமாவிற்கு வந்த புதுசில் மீனாட்சி என்று பெயர் மாற்றிக்கொண்டார். ஆனால் இந்த பெயர் எடுபடவில்லை என்பதால் அடுத்ததாக ஷர்மிலி என வைத்து விட்டார். ஆனால் இந்த பேரும் இவருக்கு சொல்லும் படியாக அமையவில்லை.

சரி பெயரை மாற்றி என்ன பிரயோஜனம், நம்மளையே நம்ம மாத்திக்கிடலாம் என்று ஹோம்லியா வந்தவர் கிளாமரில் களமிறங்கினார். ஆனால் அதுவும் இவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மனமடைந்து போன இவர் சினிமா வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார். தற்போது எங்கே இருக்கிறார் என்று தெரியாத அளவிற்கு போய்விட்டார்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.