ஒரே தலையால் பத்து தல-க்கு வந்த முட்டுக்கட்டை.. விடுதலைக்கு மட்டுமே அமோக வரவேற்பு

சிம்பு நடிப்பில் கடைசி இரண்டு படங்களான மாநாடு மற்றும் வெந்து தணிந்த காடு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெற்றது. இதற்கிடையில் இவர் கடந்த மூன்று வருடங்களாக பத்து தல படத்திற்கான சூட்டிங்கில் மிகவும் பிசியாக நடித்து வந்தார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்ததால் இப்படம் இந்த மாதம் கடைசி தேதியில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்தப் படத்தை சிம்பு ரசிகர்கள் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு சில முட்டுக்கட்டைகள் ஏற்பட்டு இருக்கிறது. அது என்னவென்றால் இப்படம் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவித்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடித்து வெளியாக இருக்கும் விடுதலை படம் 31ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விடுதலைப் படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்கிறது. இவருடன் எந்த படங்கள் போட்டிக்கு வந்தாலும் இவர் வெளியிடும் படத்துக்கு மட்டும் தான் தியேட்டர்கள் அதிகமாக ஒதுக்கப்படும் என்று நம் கண்கூடாக சமீபத்தில் வெளியான வாரிசு மற்றும் துணிவு படத்தின் மூலம் நன்றாகவே பார்த்திருப்போம்.

அந்த வகையில் விடுதலை படத்திற்கு நிச்சயமாக அதிக தியேட்டர்கள் வழங்கப்படும். அப்படி என்றால் பத்து தல படத்தை டீலில் விட்டு விடுவார்கள். ஏற்கனவே சிம்பு படம் என்றாலே பல சர்ச்சைகளிலும் பிரச்சனைகள் சந்தித்து தான் வெளியாகும். அந்த வகையில் இப்படத்திற்கு பெரிய சோதனையாக அமைந்திருக்கிறது.

படம் ரிலீசுக்கு முன்னாடியே இப்படி பல முட்டுக்கட்டைகள் வந்து கொண்டு இருக்கிறது. இது அவருக்கு மட்டுமில்லாமல் இவர் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுக்கிறது. ஆனாலும் சிம்புவின் ரசிகர்கள் அவரை கைவிட மாட்டார்கள் என்பதால் இந்த படம் அவருக்கு வெற்றியைக் கொடுக்கும்.

இதே மாதிரி பிரச்சினைகளை சந்தித்து விஜய் படம் வெளி வந்திருந்தாலும் எந்தவித நஷ்டமும் இல்லாமல் அவருக்கு பெரிய லாபத்தை தான் கொடுத்திருக்கிறது. அதே மாதிரி சிம்புவின் படமும் அவர் எதிர்பார்த்தபடி லாபத்தை கொடுக்கும். அத்துடன் சூரி முதன் முதலாக நடிகராக நடித்து வெளியாகி வரும் விடுதலை படத்துக்கும் அமோக வரவேற்பு இருப்பதால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே பெரிய அளவில் போட்டி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.