1. Home
  2. கோலிவுட்

நயன்தாராவுக்கு டைம் கிடைச்சா, கூட நடிக்க வரணுமா? லாரன்ஸை நிஜ சந்திரமுகியாக மாற்றிய லேடி சூப்பர் ஸ்டார்

நயன்தாராவுக்கு டைம் கிடைச்சா, கூட நடிக்க வரணுமா? லாரன்ஸை நிஜ சந்திரமுகியாக மாற்றிய லேடி சூப்பர் ஸ்டார்

லாரன்ஸ் தற்போது சந்திரமுகி 2, துர்கா என கையில் பல படங்களை வைத்துள்ளார். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் திரைக்கதையில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லாரன்ஸ் அதிகாரம் என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. ஆனால் அதன் பின்பு படப்பிடிப்பு தொடங்கவில்லை. ஏனென்றால் இந்த படத்தில் ஹீரோயினாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதன் பின்பு கதை பிடிக்கவில்லை என்று மறுத்து விட்டாராம்.

ஆகையால் இந்த படம் பாதியிலேயே டிராப் ஆகிவிட்டது. எனவே நயன்தாராவால் வெற்றிமாறன் கதையில் நடிக்க முடியவில்லை என்ற மன வருத்தம் லாரன்ஸுக்கு இருந்துள்ளது. அதன் பின்பு லாரன்ஸ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாள் அன்று NT-81 என்ற படத்தின் அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டு இருந்தார். அதாவது துரை செந்தில்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் ரவுடி பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தின் அறிவிப்பு தான் அது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதத்தில் தொடங்க உள்ளது. இப்போது இந்த படத்தில் நடிக்க லாரன்ஸை கூப்பிடும் போது கடும் கோபத்தில் முடியாது என்று சொல்லிவிட்டாராம். நயன்தாராவுக்கு டைம் கிடைச்சா நான் வந்து நடிக்கணுமா என நிஜ சந்திரமுகியாக லாரன்ஸ் மாறிவிட்டாராம்.

ஏனென்றால் அதிகாரம் படம் தொடங்கும் போது ஒரு சாதாரண ஹீரோவாக லாரன்ஸ் இருந்தார். ஆனால் இப்போது பல படங்களை கைவசம் வைத்து ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஆகையால் இப்போது நயன்தாராவை கூப்பிட்டாலும் நான் நடிக்க மாட்டேன் என்று லாரன்ஸ் கூறியது பரபரப்பாக பேசப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.