அது நடந்தா துணிவு படம் ரிலீஸுக்கு முன்னரே 450 கோடி வசூலாகும்.. வாய்ப்பை உதாசீனப்படுத்தும் அஜித்

நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் நூறு கோடி வரை வசூலை எட்டினாலும், அவரது திரைப்படங்களுக்காக எந்த ஒரு ப்ரோமோஷன்களிலும் கலந்து கொள்ளமாட்டார். ஆனால் நடிகர் விஜய் அவர் நடிக்கும் திரைப்படங்களில் வெளியாகும் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி முதல் படம் ரிலீஸ் வரை ப்ரோமோஷன்களில் கலந்து கொள்வார் என்பது பலரும் அறிந்தது.

அதுமட்டுமில்லாமல் விஜய்யின் திரைப்படங்களின் அப்டேட்களும் விறுவிறுப்பாக ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக வெளியாகும். ஆனால் அஜித்தின் திரைப்படத்திற்காக ரசிகர்கள் இணையத்தில் பல மீம்ஸ்களை வெளியீட்டு சோர்வடைந்து பின்னர் தான் அவர் நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட் கிடைக்கும்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய்யின் நடிப்பில் வாரிசு திரைப்படத்தின் ரஞ்சிதமே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன. ஏற்கனவே இத்திரைப்படத்தில் 2 போஸ்டர்கள் வெளியானதையடுத்து, வரும் பொங்கலன்று இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் படக்குழு ப்ரோமோஷன்களில் தீவீரமாக இறங்க உள்ளனர்.

இதனிடையே நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் மேற்கொண்டு எந்த அப்டேட்களும் தற்போதுவரை இல்லை. இருந்தாலும் பொங்கலன்று வாரிசு, துணிவு ஒன்றாக ரிலீசாகும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஆனால் துணிவு திரைப்படத்தில் மார்க்கெட் சற்று தொய்வாக உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தமிழகத்தை தாண்டி மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ரிலீசாகும். அந்த வகையில் விஜய்யின் வாரிசு திரைப்படத்தை காட்டிலும் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் மார்க்கெட் சரிந்துள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமம் எதுவும் பெரிதாக சூடுபிடிக்காமல் உள்ளது.

இதற்கு காரணம் நடிகர் அஜித் அவர் நடிக்கும் படத்தை பற்றி பேசாமலும், எந்த ஒரு அப்டேட் கொடுக்காமல் இருப்பதுதான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஜித் நடிக்கும் படம் மேல் நம்பிக்கை இருந்தாலும், அவர் எதுவும் பேசாமல் அவர் வேலையை மட்டும் செய்துவிட்டு செல்வதால் பலரும் துணிவு படத்தின் உரிமத்தை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். அவர் வாயைத் திறந்தாள் பிரமோஷனில் கலந்து கொண்டால் தற்போது உள்ள வியாபாரத்தை விட இரண்டு மடங்கு அதாவது 450 கோடிக்கு மேலும் வசூல் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.