1. Home
  2. கோலிவுட்

சாமினு அழைத்தால் சாமி ஆகிவிடுவாரா.! ஓவர் ஹெட் வெயிட்டில் இரங்கல் செய்தி பதிவிட்ட இளையராஜா

சாமினு அழைத்தால் சாமி ஆகிவிடுவாரா.! ஓவர் ஹெட் வெயிட்டில் இரங்கல் செய்தி பதிவிட்ட இளையராஜா
இரங்கல் செய்தியை பதிவிடும் போது கூட ஓவர் ஹெட் வெயிட் காட்டிய இளையராஜா.

70களில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருப்பவர் இசைஞானி இளையராஜா. இவர் இசையில் மட்டும் தான் ஞானி, மற்றபடி ஒரு தனி மனிதனாய் மிக கர்வமான ஒரு மனிதராகவே இருக்கிறார் என்று பலபேர் கூறுகின்றனர்.

நிறைய பிரபலங்களை இவரை மோசமான ஒரு மனிதராய் சித்தரித்து வருகின்றனர். அவரும் அப்படித்தான் நடந்து கொள்கிறார். இப்படிப்பட்ட ஒரு ஞானி, ஆன்மீகவாதி போல் இருக்கக் கூடியவர் இந்த விஷயத்திற்கு இப்படி அற்பமாய் நடந்து கொள்கிறாரே என்று நிறைய விஷயங்களில் யோசிக்க வைத்து விட்டார் இளையராஜா.

சமீபத்தில் கூட இவர் மனோபாலா இறப்பிற்கு மிக கர்வமாக இரங்கல் தெரிவித்திருந்தார். அதாவது நான் காரில் கிளம்பும்போது என் கார் கோடம்பாக்கம் வரும் நேரத்தை அறிந்து ரோட்டில் காத்துக் கிடந்து என்னை பார்க்கும் பல இயக்குனர்களில் ஒருவர் தான் மனோபாலா என்று வக்கிரமாக இரங்கல் தெரிவித்தார்.

ஒரு மனிதன் இறந்த பின்பு இப்படி இரங்கல் தெரிவிப்பது இளையராஜாவின் பெரிய கர்வத்தை காட்டுகிறது. இவருடைய இந்த வீடியோ பதிவை பார்த்த பிரபலங்கள் பலரும் மனோபாலா இளையராஜாவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று காட்டமாக பதில் அளித்து இருக்கின்றனர்.

மேலும் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இளையராஜாவை ரஜினி உள்ளிட்ட உச்ச நடிகர்களும் பின்னணி பாடகர்களும் சாமி என பொதுவாக அழைப்பார்கள். ஆனால் அவர்கள் எல்லாம் சாமி என்று சொன்னதும் நிஜமாகவே சாமி ஆகி விட்டோம் என்ற எண்ணம் இளையராஜாவிற்கு வந்துவிட்டது போல் தெரிகிறது.

அதனால் தான் கடந்த சில வருடங்களாக மிக மோசமாக நடந்து கொள்கிறார். அதுவும் மனோபாலாவின் இரங்கல் செய்தி பலரையும் கடுப்பேற்றி உள்ளது. இவருடைய ஓவர் ஹெட் வெயிட் அவருக்கு நல்லதுன்னு படல என்று திரை பிரபலங்களும் ரசிகர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.