Ilaiyaraaja: இசைஞானி இளையராஜா பாடல் காப்பி ரைட் சம்பந்தமாக அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். ஏன் இவர் மட்டும் இப்படி இருக்கிறார். இந்த வயதிலும் அப்படி என்ன பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் மீது கடும் விமர்சனங்கள் இருக்கிறது.
ஆனால் ஒருவருடைய படைப்பை பயன்படுத்தும் போது முறையாக அவரிடம் அனுமதி கேட்க வேண்டும். இளையராஜாவிடம் ஒரு வார்த்தை சொன்னால் போதும் மறுப்பு ஏதும் சொல்ல மாட்டார். ஆனால் அவரை மதிக்காததால் தான் இப்படி நோட்டீஸ் விடும் நிலை வருகிறது.
இப்படி இளையராஜா காப்பி ரைட் விவகாரம் பூதாகரமாக வெடித்த சில சம்பவங்களை பார்ப்போம். அதில் 2015 ஆம் ஆண்டு வெளியான கப்பல் படத்தில் ஊரு விட்டு ஊரு வந்து பாடல் இடம் பெற்றிருந்தது. அதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பினார்.
அடுத்ததாக 2017 ஆம் ஆண்டு எஸ்பி பாலசுப்பிரமணியம், எஸ் பி பி சரண், சித்ரா ஆகியோர் மேடையில் தன் பாடல்களை பாடியதற்காக நோட்டீஸ் அனுப்பினார். இதுதான் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
பிரண்ட்ஷிப் எல்லாம் அப்பால போ
இத்தனைக்கும் எஸ்பிபி இளையராஜாவின் நெருக்கமான நண்பர். அவருக்கே நோட்டீஸ் கொடுத்தது இப்போது வரை விமர்சனமாக தான் இருக்கிறது.
மேலும் மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு காதலன் என குணா படத்தில் வரும் பாடல் இடம் பெற்றிருந்தது. சொல்லப்போனால் படத்தின் வெற்றிக்கு இது பெரும் காரணமாக உள்ளது.
இதற்காக இளையராஜா இரண்டு கோடி கேட்டு நோட்டீஸ் விட்டார். ஆனால் பட குழு 60 லட்சம் கொடுத்து சமரசமாக போனார்கள். அதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்த மாதம் வெளிவர இருக்கும் கூலி பட டீசரில் வா வா பக்கம் வா பாடல் இருந்தது.
உடனே இளையராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். அதை அடுத்து சமீபத்தில் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் மூன்று பாடல்கள் இருந்தது.
அதற்காக அவர் 5 கோடி கேட்டு தயாரிக்கும் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார். அதை அடுத்து இப்போது வனிதா நடித்துள்ள மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் படத்தில் தன் பாடல் இடம் பெற்றதற்காக இளையராஜா நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இதற்காக பத்திரிக்கையாளர்கள் முன்பு வனிதா கண்ணீர் விட்டு கதறியது குறிப்பிடத்தக்கது. இப்படியாக இசைஞானி ராயல்டி கேட்டு கடும் சர்ச்சையில் சிக்கிக் கொண்டிருக்கிறார்.