ஒரு படத்திற்கு கதை எவ்வளவோ முக்கியமோ அதைவிட முக்கியம் அந்த படத்தில் வரும் பாடல்கள் தான். அந்தப் பாடலுக்கு உயிரூட்டும் விதமாக அமைவது இசை. பொதுவாகவே ஒரு படம் வெளிவந்தால் அந்த படத்தை ஒரு முறை பார்த்துவிட்டு அதை மறந்து விடுவோம். ஆனால் பாடல் அப்படி இருக்காது. எப்பொழுதும் அடிக்கடி கேட்கக் கூடியதாகவும், பார்த்து ரசிக்க கூடியதாகவும் இருக்கும்.
அந்த வகையில் தனது இசையால் கட்டிப் போட்டவர் தான் இசைஞானி இளையராஜா. அந்த காலத்தில் மட்டுமல்ல இப்பொழுது வரையும் இவருடைய பாடல்களைக் கேட்டால் எல்லா கவலைகளையும் மறந்து சொர்க்கத்திற்கே சென்ற மாதிரி ஒரு உணர்வை கொடுக்கும். அத்துடன் சில படங்கள் கதை சரியாக அமையாமல் இருந்த பொழுதிலும் அதற்கு பக்கபலமாக இருந்தது இவருடைய பாடல்கள் என்றே சொல்லலாம்.
இவருடைய இசைக்கு என்றுமே அழிவே கிடையாது. அந்த வகையில் ஒரு படத்திற்கு வெறும் இரண்டு மணி நேரத்தில் ஏழு பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார். அந்தப் படம் தான் ராஜ்கிரண் நடிப்பில் வெளிவந்த அரண்மனை கிளி. இப்படத்தை ராஜ்கிரண் இயக்கி அதில் ஹீரோவாக நடித்து இவரை தயாரித்திருக்கிறார்.
இந்த படத்தில் இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என்று அவருடைய ஸ்டூடியோ விற்கு ஏழரை மணி அளவில் சென்றிருக்கிறார். பிறகு அவரைப் பார்த்து இந்த படத்திற்கான சிச்சுவேஷனை சொல்லி இருக்கிறார். உடனே இளையராஜா அந்தக் கதைக்கு ஏற்ற மாதிரி பாடல்களை ஆரம்பித்து கம்போசிங் தொடங்கி விட்டார்.
மேலும் இரண்டு மணி நேரத்துக்குள் ஏழு பாடல்களையும் இசையமைத்து ரெக்கார்ட் செய்து கொடுத்து இருக்கிறார். அப்படி அவர் இசையமைத்த கொடுத்த அந்த ஏழு பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி அந்தப் படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவரிடம் ஒரு பெரிய மேஜிக் இருக்கிறது என்று சொல்லலாம்.
இதே போல எந்த ஒரு இசையமைப்பாளரும் இதுவரை செய்ததில்லை. இனியும் செய்யப் போவதில்லை என்று இவரை பற்றி ஆக்டர் மாரிமுத்து கூறியுள்ளார். அத்துடன் இவருடைய இசைக்கு எப்பொழுதுமே அனைவரும் அடிமைதான். மேலும் இவருடைய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எங்கோ ஒரு இடத்தில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கும்.