1. Home
  2. கோலிவுட்

பேராசையில் GOAT படத்திற்கு வந்த ஆபத்து.. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்!

பேராசையில் GOAT படத்திற்கு வந்த ஆபத்து.. உள்ளதும் போச்சு நொள்ளக் கண்ணா கதை தான்!

Vijay - GOAT : வெங்கட் பிரபு, விஜய் கூட்டணியில் உருவாக்கி வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தது.

அதில் விஜய், பிரபுதேவா, பிரசாந்த் மற்றும் அஜ்மல் ஆகியோர் கையில் துப்பாக்கையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் படத்தில் சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா போன்ற கதாநாயகிகளும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த சூழலில் கோட் படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகள் விற்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த படத்தின் ஓடிடி உரிமை 125 கோடி கேட்கின்றனர். விஜய்யின் முந்தைய படத்திற்கு ஐந்து மொழிகளிலும் 125 கோடி தான் விற்கப்பட்டது.

இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் அதிக தொகை கேட்பதால் எந்த நிறுவனங்களும் கோட் படத்தை வாங்க முன் வரவில்லை. இப்படத்தின் ஆடியோ ரைட்ஸ் மட்டும் தற்போது 24 கோடிக்கு விற்கப்பட்டிருக்கிறது. இதனால் தயாரிப்பு நிறுவனம் படத்தின் பட்ஜெட்டை குறைத்து வருகிறதாம்.

ஏனென்றால் இப்படத்தை வாங்க ஓடிடியில் நிறுவனங்கள் முன் வராத நிலையில் தியேட்டரில் படம் நன்றாக இருந்தால் மட்டுமே வசூலை அள்ள முடியும். விஜய்யின் படங்களுக்கு மவுசு இருப்பது உண்மை தான். ஆனால் இதை வைத்து நிறைய லாபம் பார்க்க நினைத்த நிலையில் உள்ளதும் போச்சு நொள்ள கண்ணா என்ற கதையில் தான் இப்போது ஏஜிஎஸ் நிறுவனம் உள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.