1. Home
  2. கோலிவுட்

அந்தர்பல்டி அடித்த இந்தியன் 2 படம்.. கமல் இல்லாமல் நடக்கும் சூட்டிங்

அந்தர்பல்டி அடித்த இந்தியன் 2 படம்.. கமல் இல்லாமல் நடக்கும் சூட்டிங்

Kamal in Indian 2: இந்தா வருது அந்தா வருதுன்னு கிட்டத்தட்ட இந்தியன் 2 படம் ஆரம்பிக்கப்பட்டு 7 வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இன்னும் வந்தபாடாக இல்லை. போதாக்குறைக்கு காட்சிகள் அதிகமானதால் இந்தியன் பார்ட் 3 வேற வரப்போகிறது. ஆனால் இங்கே பார்ட் இரண்டுக்கே வழியைக் காணோம்.

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. மேலும் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளும் முக்கால்வாசி முடிந்து விட்டது என்று சொன்னார்கள். ஆனால் இன்னும் 20 நாள் சூட்டிங் பாக்கி இருக்கிறதாம். அதனால் நாளையிலிருந்து மறுபடியும் சென்னையில் சூட்டிங்கை எடுக்கப் போகிறார்கள். அதுவும் கமல் இல்லாமல் சூட்டிங் நடக்கப் போகிறது.

அதாவது இன்னும் படத்தில் இரண்டு பாடல்கள் முடிவடையாமல் இருக்கிறது. இந்த இரண்டு பாடல்களுக்குமே கமல் தேவை இல்லையாம். அதனால் சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் அவர்களுடைய காட்சிகளை மட்டும் வைத்து எடுக்கப் போகிறார்கள். மறுபடியும் முதலில் இருந்தா என்பதற்கு ஏற்ப நாளை சென்னையில் சூட்டிங் நடைபெற இருக்கிறது.

இன்னும் மிச்சம் இருக்க காட்சிகளை முடித்துவிட்டு படத்தை எப்பொழுதுதான் ரிலீஸ் பண்ணப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. இதற்கு இடையில் வேற ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தை எடுப்பதிலும் ரொம்பவே பிஸியாக இருந்து வருகிறார். ஆக மொத்தத்தில் இந்த வருட இறுதிக்குள் படம் வந்தால் சரிதான் என்ற நிலைமைக்கு ஒட்டுமொத்த படக்குழுவும் வந்து விட்டார்கள்.

எந்த நேரத்தில் படத்தை ஆரம்பித்தார்களோ இப்படி ஜவ்வு மாதிரி இழுத்து அடித்துக் கொண்டே இருக்கிறது. இது கமலுக்கு வந்த சோதனையா அல்லது சங்கருக்கு வந்த சோதனையா என்பது தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இப்போதைக்கு இந்தியன் 2 படம் வெளிவர வாய்ப்பு இல்லை என்பது போல் தெரிகிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.