மீண்டும் தொடங்கிய இந்தியன் 2 ஷூட்டிங்.. இதுக்கு ஒரு எண்டே இல்லையா?

Indian 2: உலகநாயகன் கமலஹாசனின் அடுத்த ரிலீஸ் ஆக இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. கமல் மற்றும் சங்கர் எந்த நேரத்தில் இந்த படத்தை தொடங்கினார்களோ தெரியவில்லை, படம் இடியாப்ப சிக்கல் போல் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது, மூன்றாம் பாகத்திற்கான சூட்டிங் ஆரம்பித்துவிட்டது என சொல்லப்பட்டது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடந்த படப்பிடிப்பில் கமலும் கலந்து கொண்டார். உண்மையில் அந்த சூட்டிங் இந்தியன் 3 படத்திற்கானது கிடையாதாம். இந்தியன் 2 படத்திற்கான சூட்டிங் தான் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது பட குழு. இந்த படத்திற்கு ஒரு எண்டே இல்லையா என இப்போது ரசிகர்கள் புலம்பி கொண்டு இருக்கிறார்கள்.

தீபாவளி விடுமுறை முடிந்து அடுத்த வாரம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்த சூட்டிங் கிட்டத்தட்ட முப்பது நாட்களுக்கு நடைபெற இருக்கிறதாம். பத்தாயிரம் ஜூனியர் ஆர்டிஸ்ட்களுடன் பிரம்மாண்ட காட்சிகள் எடுக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் ரிலீஸ் ஆக இருக்கும் நேரத்தில் மீண்டும் சூட்டிங் ஆரம்பிப்பதற்கான காரணம் தெரிய வந்திருக்கிறது.

இந்தியன் 2 படத்திற்காக எடுக்கப்பட்ட அதிகபட்ச காட்சிகளை வைத்து இந்தியன் 3 படத்தை எடுக்க பட குழு திட்டமிட்டு இருக்கிறது. அதற்காகத்தான் கிளைமாக்ஸ் சில காட்சிகளை சேர்க்க இருக்கிறார்கள். மூன்றாம் பாகத்திற்கு ஏற்றது போல், இரண்டாம் பாகத்தில் சில மாற்றங்களை செய்ய பட குழு திட்டமிட்டு ஷூட்டிங்கை ஆரம்பித்து இருக்கிறது.

இந்தியன் 3 படத்திற்கான லீட் காட்சியும் எடுக்கப்பட இருக்கிறது. அதற்கான டீசர் மற்றும் ட்ரெய்லரை படமாக்கவும் சங்கர் திட்டமிட்டு இருக்கிறார். இந்தியன் 2 மற்றும் 3 படத்தை ஒரே வருடத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதால்தான் தற்போது இந்த வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது. மொத்தத்தில் அடுத்த வருடம் கமலுக்கு இரண்டு படங்கள் வசூலை அள்ள காத்துக் கொண்டிருக்கிறது.