1. Home
  2. கோலிவுட்

ஆர்யாவுக்கு வந்த திடீர் சோதனை.. அந்தர் பல்டி அடித்து எஸ்கேப் ஆன தருணம்

ஆர்யாவுக்கு வந்த திடீர் சோதனை.. அந்தர் பல்டி அடித்து எஸ்கேப் ஆன தருணம்

Arya : தமிழ் சினிமாவில் 2005ல் அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமாகி இப்போது பிரபல ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் ஆர்யா.

பல படங்களில் ஆர்யா ஹிட் கொடுத்திருந்தாலும், முக்கியமாக அவர் நடித்த சார்பட்டா பரம்பரை படம் ரசிகர்களிடையே, நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் பாகம் இரண்டு தயாராகி வருகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை:

கலர்ஸ் தமிழ் சேனலில் "எங்க வீட்டு மாப்பிள்ளை" என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து 16 பெண்களில் ஒரு பெண்ணை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஆவலுடன் காத்திருந்த ஆர்யாவுக்கு அது தோல்வியில் முடிந்தது.

அதன்பின் இந்தி, தெலுங்கு, தமிழ் மொழி படங்களில் ஃபேமஸான நடிகை சாய்ஷாவை 2019-இல் காதலித்து திருமணம் செய்தார் ஆர்யா. இப்போது இவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் உள்ளது.

பல வருடங்களாக சினிமாவில் ஹீரோவாக மட்டும் நடித்து வந்த ஆர்யா சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் 5 ஹோட்டல்கள் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

திடீரென வருமான வரி சோதனை!

இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அண்ணா நகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி உட்பட இடங்களில் இருக்கும் ஆர்யாவுக்கு சொந்தமான அனைத்து ஹோட்டல்களிலும் வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பந்தம் இல்லை!

தற்சமயம் வருமானவரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில் அந்த ஹோட்டல்களுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அதன் உரிமையாளர் வேறொருவர் என்று கூறியுள்ளார் ஆர்யா.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.