1. Home
  2. கோலிவுட்

பகவந்த் கேசரின் ரீமேக் படமா ஜனநாயகன்?அப்படி என்ன ஒத்துப் போகுதுன்னு பார்க்கலாமா!

பகவந்த் கேசரின் ரீமேக் படமா ஜனநாயகன்?அப்படி என்ன ஒத்துப் போகுதுன்னு பார்க்கலாமா!

Jananayagan : விஜய் அவர்களின் கடைசி படம் ஜனநாயகன். இந்த படத்தின் டீசர் நேற்று விஜய் அவர்களின் பிறந்தநாள் அன்று வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்துக்கே அழைத்துச் சென்றது.

பொதுவாக எந்த படம் வந்தாலுமே அதை பற்றி விமர்சனங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு ஜனநாயகன் படத்திற்கு கண் பட்டது போல் அடுத்தடுத்து நிறைய விமர்சனங்கள் நேர்மறையாக எழுந்தாலும். ஒரு சில விமர்சனங்கள் எதிர்மறையாகவும் எழுகின்றன.

அந்த வகையில் ஜனநாயகன் படம் தெலுங்கு நடிகர் பாலையா நடித்து வெளிவந்த "பகவந்த் கேசரி" என்ற படத்தின் ரீமேக்கா என்று விமர்சனமாக பேசப்பட்டு வருகிறது.

வெளிவந்த ஜனநாயகன் படம் டீசர் வெளியாகி அனைவரும் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இந்த படம் "பகவந்த் கேசரி"யின் ரீமேக் என சொல்லப்பட்டு வருகிறது . அதே போல் இரண்டு படத்திற்கும் ஒற்றுமை டீசரில் உள்ளது.

இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமை

"பகவந்த் கேசரி"யின் படத்தில் நடிகர் பாலையா அவர்கள் போலீஸ் வேடத்தில் இருப்பார், அதே போல் ஜனநாயகன் படத்தில் விஜய் அவர்களுக்கும் போலீஸ் வேடம். மற்றும் பாலையா அவர்கள் சிட்டிங் போஸ், அதே போல் விஜய் அவர்களின் சிட்டிங் போஸ்.

அதுமட்டும் இல்லாமல் பாலையா அவர்கள் போட்டுள்ள விநாயகர் டாலர், அதே போல் விஜய் அவர்கள் போட்டுள்ள வேல் டாலர் என இப்படி பல ஒற்றுமைகளை வைத்து ரீமேக் படமாகத்தான் இருக்கும் என விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.

பகவந்த் கேசரின் ரீமேக் படமா ஜனநாயகன்?அப்படி என்ன ஒத்துப் போகுதுன்னு பார்க்கலாமா!

ஆனால் நடிகர் விஜய் மேல் அனைவருக்கும் நல்ல நம்பிக்கை உள்ளது. அவ்வாறு ரீமேக்காக இருந்தாலும் அதே பாணியில் முற்றிலுமாக கதை இருக்காது ஒரு சில இடங்கள் மட்டும் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் டைரக்டர் ஹச் வினோத் அவர்கள் மீது நன்றாகவே நம்பிக்கை உள்ளது.

டைரக்டர் ஹச் வினோத் எதார்த்தமாக படம் இயக்கக் கூடிய நபர். அதனால் தேவையில்லாத மசாலா மிக்ஸ், இவைகளை தவிர்த்து நன்றாக இந்த கதையை கொண்டு வந்திருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அப்படியே ரீமேக்காக இருந்தாலும் கூட நடிகர் விஜய் படத்தை கொண்டாட நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக பேசப்பட்டு வருகிறது.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.