ரஜினி எல்லாம் ஒரு சிறந்த நடிகரா?. விருது கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் பேசிய அமீர்

இயக்குனர் அமீர் எப்போதுமே ஏடாகூடமாக பேசி சர்ச்சையில் சிக்க கூடியவர். அந்த வகையில் இப்போதும் ரஜினியை பற்றி பேசி பிரச்சனையை கிளப்பி உள்ளார். அதாவது சமீபத்திய பட விழா ஒன்றில் கலந்து கொண்ட அமீர் இடம் பத்திரிக்கையாளர்கள் ஆஸ்கர் விருதை பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர்.

விருதை பொருத்தவரையில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், இப்போது கொடுக்கும் விருதுகள் எல்லாம் லாபி தான் என்று அமீர் பேசி இருந்தார். மேலும் சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கப்பட்டது. ரஜினி சிறந்த நடிகரா என்ற கேள்வியை பத்திரிக்கையாளர்களிடம் அமீர் எழுப்பினார்.

அதாவது ரஜினி ஒரு சிறந்த என்டர்டைனர் என்பதை ஒற்றுக்கொள்ளலாம். ஆனால் சிவாஜி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்பதை ஏற்க முடியாது. அதுவும் 2007 ஆம் ஆண்டு வெளியான படங்களில் சிவாஜி படம் தான் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததா என்ற கேள்வியையும் முன் வைத்தார்.

ஏனென்றால் அமீரின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான விருது கொடுக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இவ்வாறு பேசுகிறார் என சிலர் கூறி வருகிறார்கள். ஏனென்றால் அமீர் பேசுகையில் அந்த ஆண்டை அழுத்தமாக கூறியிருந்தார்.

அதுமட்டுமின்றி ரஜினியின் ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் போன்ற படங்களில் சிறப்பாக நடித்திருந்தாலும் அப்போது ஏன் விருது கொடுக்கவில்லை என்று பத்திரிகையாளர்கள அமீர் வினவினார். ஏனென்றால் அப்போதும் விருது கொடுப்பதில் அரசியல் இருந்தது.

இப்போதும் அது தொடர்ந்து வருவதால் தான் சிறந்த படங்கள் மற்றும் சிறந்த நடிகர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை என்பது போல அமீர் பேசி இருந்தார். மேலும் அவர் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.