1. Home
  2. கோலிவுட்

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?. அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?. அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர். இந்நிலையில் நெல்சனின் முந்தைய படமான பீஸ்ட் படம் சொதப்பி விட்டதால் இப்போது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் நெல்சன் செயல்பட்டு வருகிறார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 22 ஆம் தேதி துவங்கியது. இப்போது படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வருகிறது. அண்மையில் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருந்தது.

அதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு இருந்தனர். ஏற்கனவே சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. நெல்சன் தான் சிவகார்த்திகேயனை ரஜினியிடம் சிபாரிசு செய்துள்ளார்.

ஆனால் ரஜினி எனது படத்தில் ஒரு ஹீரோ தான் இருக்க வேண்டும் என்பதை எப்போதுமே நினைக்கக் கூடியவர். ஆகையால் சிவகார்த்திகேயன் ஜெயிலர் படத்தில் நடிக்க வேண்டாம் என ரஜினி கூறியதாக சொல்லப்பட்டது. இப்போது சிவராஜ்குமார் உடன் சிவகார்த்திகேயன் மற்றும் ரஜினி இருக்கும் புகைப்படங்கள் தனித்தனியாக வெளியாகி உள்ளது.

எனவே ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இதில் சிவகார்த்திகேயனின் கெட்டப்பை பார்க்கும் போது மாவீரன் படத்தில் உள்ளது போல இருக்கிறது. ஒருவேளை மாவீரன் படத்திலும் சிவராஜ் நடிக்கிறாரோ என்ற உச்சகட்ட குழப்பத்தை இந்த புகைப்படம் ஏற்பட்டது.

ஆகையால் ஜெயிலர் படக்குழுவிடம் இருந்து அதிகபூர்வ அறிவிப்பு வெளியானால் மட்டுமே சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிக்கிறாரா என்ற தகவல் வெளியாகும். மேலும் நேற்று ஜெயிலர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறாரா?. அதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்
shivarajkumar-rajini-sivakarthikeyan
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.