1. Home
  2. கோலிவுட்

உதயநிதியை போல் உருவாகும் அடுத்த வாரிசு.. சம்பளம் கூட கொடுக்காமல் இழுத்தடிக்கும் பரிதாபம்

உதயநிதியை போல் உருவாகும் அடுத்த வாரிசு.. சம்பளம் கூட கொடுக்காமல் இழுத்தடிக்கும் பரிதாபம்
உதயநிதி ஸ்டாலின் போல் உருவாகி வருகிறார் அடுத்த வாரிசு. அவர் நடிப்பில் விரைவில் வரவுள்ள செகண்ட் பார்ட் படம்.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவுக்கு வந்த புதிதில் இவரெல்லாம் ஹீரோவா என பலரும் விமர்சித்தனர். மேலும் ஆசைக்காக இரண்டு, மூன்று படங்களை நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலகுவார் என்றும் கூறினர். ஆனால் அதற்கெல்லாம் மாறாக தற்போது சினிமாவில் கலக்கி கொண்டிருக்கிறார் உதயநிதி. ஆரம்பத்தில் காமெடி படங்களில் மட்டுமே நடித்து வந்த உதயநிதி இப்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இது தவிர தயாரிப்பாளர், விநியோகஸ்தர் என பட்டையை கிளப்பி வருகிறார். இப்போது உதயநிதியைப் போலவே அடுத்த வாரிசு ஒன்று உருவாகி வருகிறது. அருள்நிதிக்கு திகில் படங்களே கை கொடுத்த நிலையில் தொடர்ந்து அதுபோன்ற படங்களில் நடித்து வருகிறார். அந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெறுகிறது. இந்நிலையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் டிமான்டி காலனி. இப்போது கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் கழித்த டிமான்டி காலனி படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார். இப்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரில் நடந்து வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஆனால் டிமான்டி காலனி 2 படத்தில் வேலை செய்யும் டெக்னீசியன்களுக்கு தற்போது வரை சம்பளம் கொடுக்க வில்லையாம். நம்ம தம்பி படம் தான் என்று எப்போது வேணாலும் வாங்கிக் கொள்ளலாம் என அவர்களும் பொறுத்து பொறுத்து போய்க் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த தயாரிப்பாளர் இப்படி செய்வது ஒரு நியாயமான விஷயம் அல்ல என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த விஷயம் அருள்நிதி காதுக்கு சென்றதா என்பது தெரியவில்லை. ஆனால் இப்படத்தின் தொழிலாளர்கள் தான் தற்போது பரிதவித்த வருகிறார்கள்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.