வருங்கால கணவருடன் ஜனனி ஐயர்.. வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்

Janani Iyer : அசோக் செல்வன் நடிப்பில் வெளியான தெகிடி படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் ஜனனி ஐயர். இவர் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

இதை அடுத்து அதே கண்கள், பலூன், தர்மபிரபு போன்ற சில படங்களில் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் அவருக்கு குறைய தொடங்கிய நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இரண்டாவது சீசனில் கலந்து கொண்ட ஜனனி ஐயர் இறுதிவரை சென்றார். ஆரம்பத்தில் மாடல் துறையில் நுழைந்த இவர் 100க்கும் மேற்பட்ட விளம்பரங்களில் நடித்திருக்கிறார்.

ஜனனி ஐயரின் நிச்சயதார்த்த புகைப்படம்

அதோடு புதிதாக தொழிலும் தொடங்கி இருக்கிறார். 38 வயதாகும் ஜனனி ஐயர் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்தார். இப்போது தனது சமூக வலைதள பக்கத்தில் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

janani-iyer
janani-iyer

அதில் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார். ரோஷன் ஷாம் என்பவரை ஜனனி ஐயர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மேலும் நெருக்கமான உறவினர்கள் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

விரைவில் ஜனனி ஐயர் திருமண தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கலாம். இந்த புகைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.