1. Home
  2. கோலிவுட்

பழக்க தோஷம் மாறல, தண்டவாளத்தில் ஏறிய அட்லியின் வண்டவாளம்.. விஜயகாந்தின் இந்த படம் தான் ஜவான்

பழக்க தோஷம் மாறல, தண்டவாளத்தில் ஏறிய அட்லியின் வண்டவாளம்.. விஜயகாந்தின் இந்த படம் தான் ஜவான்
ஜவான் விஜயகாந்த் படத்தின் காப்பி என தெரியவந்துள்ளது.

Jawan: எப்படா அட்லியை சிக்க வைக்கலாம் என்று காத்திருப்பவர்களுக்கு ஏற்ற மாதிரி தான் ஒவ்வொரு சம்பவமும் நடக்கிறது. எங்க போனாலும் பழக்க தோஷம் மட்டும் மாறாது என்ற கதையாக அவரின் வண்டவாளம் இப்போது தண்டவாளத்தில் ஏறி விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

என்னவென்றால் தற்போது வெளியாகி உள்ள ஜவான் படம் விஜயகாந்த் படத்தின் காப்பி என்று ஏற்கனவே ஒரு பஞ்சாயத்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அட்லியோ ரொம்பவும் கூலாக பழைய படங்களை தான் இப்போது உள்ள இயக்குனர்கள் மாற்றி மாற்றி எடுத்து வருகின்றனர் என்று தன்னுடைய தப்புக்கு சப்பை கட்டு கட்டினார்.

இருந்தாலும் ரசிகர்கள் ஜவான் மட்டும் வரட்டும் அப்புறம் இருக்கு என்று காத்துக் கொண்டிருந்தார்கள். அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள இப்படம் விஜயகாந்தின் ரமணா பட காப்பி போல் இருப்பதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி வாகை சூடியது. அதைத்தான் அட்லி காப்பி அடித்து விட்டார் என்று சில ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர். இதற்கு முன்பு அவர் இயக்கிய பல படங்கள் இது போன்ற சர்ச்சைகளை தான் சந்தித்தது.

ஆனாலும் குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று அவர் அதற்கு விளக்கம் கொடுத்து வந்தார். இந்நிலையில் இப்படி ஒரு பஞ்சாயத்து கிளம்பி இருப்பது ஜவான் வசூலுக்கு பாதிப்பாக அமையும் என்ற கருத்துக்களும் இப்போது எழுந்துள்ளது.

ஆனாலும் இதெல்லாம் என்ன புதுசா, வழக்கமா நடக்கிறது தானே. ஏ ஆர் முருகதாஸ் படத்தையே காப்பி என்று சர்ச்சை கிளம்பிய நிலையில் அவரிடமே அட்லி ஆட்டையை போட்டு இருப்பது யாரும் எதிர்பார்க்காதது தான். இதைத்தான் ரசிகர்கள் இப்போது நீங்க அட்லியா இல்ல சுட்லியா என்று கேட்டு வருகின்றனர்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.