மனைவி, மகன்களுக்கு தெரியாமல் ஜெயம் ரவி எடுத்த முடிவு.. ஆர்த்தி வைத்த குற்றச்சாட்டு

Jayam Ravi : கடந்த இரண்டு நாட்களாக இணையத்தில் பெரிதாக பேசப்படும் விஷயம் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து செய்தி. கிட்டத்தட்ட 15 வருடங்களாக இல்லற வாழ்க்கையில் இருந்த இவர்கள் திடீரென பிரிய காரணம் என்று விவாதிக்க தொடங்கிவிட்டனர்.

மேலும் இதை அதிகாரப்பூர்வமாக ஜெயம் ரவியே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். ஒருபுறம் ஜெயம் ரவிக்கு எதிராகவும், மற்றொருபுறம் ஆர்த்திக்கு எதிராகவும் பல கருத்துக்களை ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் கூறி வருகிறார்கள்.

இப்போது ஆர்த்தி எனக்கு தெரியாமலேயே ஜெயம் ரவி விவாகரத்து செய்தியை அறிவித்ததாக குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த செய்தி கேட்டு தான் கவலையும், மன வேதனையும் அடைந்ததாக கூறியுள்ளார்.

தன்னிச்சையாக விவாகரத்து முடிவெடுத்த ஜெயம் ரவி

aarthi-statement
aarthi-statement

மேலும் என் கணவர் ஜெயம் ரவியுடன் மனம் விட்டுப் பேச மற்றும் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது இதனால் நானும் என் குழந்தைகளும் என்ன செய்வதென்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

aarthi-tweet
aarthi-tweet

மேலும் எங்களது திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற முடிவை முழுக்க முழுக்க ஜெயம் ரவி எடுத்ததே தவிர குடும்ப நலன் கருதி எடுத்த முடிவு இல்லை என்றும் ஆர்த்தி அதில் குறிப்பிட்டு இருக்கிறார். என் மீது சுமத்தப்பட்ட ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகள் என்னுடைய குழந்தைகளை காயப்படுத்துவதை தன்னால் அனுமதிக்க முடியாது.

சில சமயங்களில் மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும். ஆகையால் இந்த பொய்களை மறுப்பது என் முதல் கடமை என்று தனது அறிக்கையில் ஆர்த்தி குறிப்பிட்டு இருக்கிறார். ஜெயம் ரவி தன்னிச்சையாக விவாகரத்து பெற என்ன காரணம் என்று இப்போது ஆர்த்தியின் அறிக்கையால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

திருமணத்தில் எவ்வாறு இருவரின் சம்மதம் முக்கியமோ அதேபோல் விவாகரத்திலும் இருவரது விருப்பமும் கட்டாயம். ஆனால் ஜெயம் ரவி தனதமனைவிக்கு தெரியாமல் இவ்வாறு திடீரென முடிவெடுத்தது அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது குழந்தைகளுக்காக கொஞ்சம் யோசித்து இருக்கலாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →