நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களில் 90 காலக்கட்டத்தில் நடித்து கனவு கன்னியாக வலம் வந்தவர்.இவருக்கு 2009 ஆம் ஆண்டு திருமணமான நிலையில், குடும்பத்துடன் சில வருடங்கள் செட்டிலாகி சினிமாவை விட்டு விலகியிருந்தார். பின்னர் இவரது மகள் நைனிகா விஜயின் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார்.
அதன் பின் மீனாவும் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதில் முக்கியமான படம் தான் மலையாளத்தில் நடிகர் மோகன்லால் நடித்த திரிஷ்யம் திரைப்படம். இப்படம் உலகமெங்கும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், மீனாவுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இந்நிலையில் நடிகை மீனாவின் கணவர் கடந்தாண்டு நுரையீரல் பாதிப்பால் சென்னையில் காலமானார்.
இவரது மறைவு தென்னிந்தியா சினிமாவையே அதிரவைத்தது. பெங்களூரில் மீனாவின் வீட்டுப்பக்கத்தில் அமைந்திருந்த புறா வளர்ப்பு கூடத்திலிருந்து வந்த, புறா எச்சத்தின் துர்நாற்றம் காரணமாக மீனாவின் கணவருக்கு நுரையீரல் பாதித்ததாக மீனா தெரிவித்தார். மேலும் மீனா அடுத்த திருமணம் செய்ய போகிறார் என்றெல்லாம் இணையத்தில் செய்திகள் உலா வந்த நிலையில், மீண்டும் கவலையில் ஆழ்ந்தார் மீனா.
நான் இன்னும் என் கணவரின் இழப்பிலிருந்தே மீளவில்லை, அதற்குள் இன்னொரு திருமணம் பற்றி அனைவரும் பேசுவது தனக்கு வேதனையளிப்பதாக மீனா வருத்தத்துடன் தெரிவித்தார். மீனாவின் கணவர் உயிரிழந்த நாளிலிருந்து பிரபல நடன இயக்குனரும், மீனாவின் நெருங்கிய தோழியுமான கலா மாஸ்டர் மீனாவுக்கு ஆறுதலாக அவருடனே உறுதுணையாக இருந்தார். ஒருமுறை கலா மாஸ்டர் ,நடிகை ரம்பா, மீனாவின் மகள், மீனா உள்ளிட்டோர் கடற்கரைக்கு சென்ற புகைப்படம் வெளியாகி வைரலானது.
மேலும் மீனாவின் வீட்டிற்கு சென்று தனது நெருங்கிய நண்பர்களுடன் மீனா இருந்த புகைப்படமும் வெளியானது. இவை அனைத்துமே கலா மாஸ்டர் மீனாவை துயரத்திலிருந்த்து மீட்டெடுக்க செய்த முயற்சியாகும். அந்த வகையில் மீனாவை மேலும் குஷிப்படுத்த மொத்த திரையலகையும் அழைத்து மீனா 40 என்ற விழாவை நடத்த கலா மாஸ்டர் திட்டமிட்டுள்ளார்.
மீனாவின் 40 ஆண்டுகால வெற்றிகரமான சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில், மீனா40 விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை ரஜினிகாந்த், கமலஹாசன் உள்ளிட்டோரின் தலைமையில் நடத்த கலா மாஸ்டர் யோசித்துள்ளாராம். தனது தோழியை கவலையிலிருந்து மீட்டெடுக்க கலா மாஸ்டர் செய்யப்போகும் இந்த செயலுக்கு மொத்த திரையுலகமும் அவரால் பாராட்டி வருவதோடு கட்டாயம் உறுதுணையாக இருக்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.