தள்ளி வைக்கப்பட்ட தக் லைஃப் ஆடியோ லான்ச்.. கமல் வெளியிட்ட அறிக்கை

Thug Life: மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி என பலர் நடித்துள்ள படம் தான் தக் லைஃப். வரும் ஜூன் 5-ம் தேதி படம் உலக அளவில் வெளியாகிறது.

இப்படத்திலிருந்து வெளியான ஜிங்குச்சா பாடல் தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் உள்ளது. அதேபோல் பட வெளியீட்டிற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்கள் தான் இருக்கிறது.

அதை முன்னிட்டு படக் குழுவினர் பரபரப்பான பிரமோஷனில் இறங்கிவிட்டனர். சமீபத்தில் கமலுடன் திரிஷா சிம்பு ஆகியோர் கலந்து கொண்ட ப்ரமோஷன் வைரலானது.

கமல் வெளியிட்ட அறிக்கை

அதை அடுத்து தெலுங்கு பிரமோஷனும் சூடு பிடித்துள்ளது. இந்த சூழலில் கமலின் தயாரிப்பு நிறுவனம் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது, வரும் மே 16ஆம் தேதி தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தற்போது இந்தியா பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்று வருகிறது.

இந்த நேரத்தில் கொண்டாட்டத்தை தள்ளி வைத்து நம் ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும். நாட்டை பாதுகாக்க எல்லையில் வீரர்களும் வீராங்கனைகளும் துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.

அந்த தியாகத்திற்கு முன் இந்த கொண்டாட்டங்கள் பெரிதல்ல. அதனால் இசை வெளியீட்டு விழா சரியான நேரத்தில் நடக்கும். தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு இந்தியனாக நாடு தான் முக்கியம் என கமல் செய்த இந்த செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது.