ஜகா வாங்கும் கமல்.. பொன்னியின் செல்வனால் வேற டிராக்கில் பயணிக்க போகும் உலகநாயகன்

கமல் நடிப்பில் இந்தியன் 2 மிக பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது. இந்த படத்தை எடுத்து முடிப்பதற்குள் சற்றும் எதிர்பாரா விதமாக ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டது. அதனால் சர்ச்சையில் சிக்கி பெரிய பஞ்சாயத்து ஏற்பட்டது. மேலும் இப்பொழுது அதை எல்லாம் கடந்து இதற்கான படப்பிடிப்பு அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்து விட்டது. இனிமேல் இந்த படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மட்டும் பாக்கி இருக்கிறது.

ஆனால் தற்பொழுது தேர்தல் நேரம் என்பதால் கமல் நிச்சயமாக அரசியல் சார்ந்த வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவார் என்று எதிர்பார்த்தனர். ஆனால் அந்த எதிர்பார்ப்பு முற்றிலும் தவறானது என்று நிரூபித்து தேர்தல் வேலைகளை விட சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தேர்தலை விட சினிமா தான் முக்கியம் என்பதை நிரூபித்துக் காட்டிட்டார்.

இந்தியன் 2 படத்தை முடித்து கையோட இவரின் அடுத்த படத்திற்கான இயக்குனரை முடிவு பண்ணியாக வேண்டும் என்று மும்மரமாக வேலை செய்து வருகிறார். அதற்காக இவரின் அடுத்த படத்தை மணிரத்தினம் இயக்குவதாக இருந்தது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் நாயகன் வெற்றி திரைப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் 2 வேலைகளில் ரொம்ப பிசியாக இருப்பதால் தன்னுடைய படத்தை இழுத்து அடிப்பார் என்று நினைத்திருக்கிறார். அதனால் இவர் வேலைக்கு ஆக மாட்டார் என்று நினைத்து புது திட்டம் போட்டு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து மணிரத்தினத்துக்கு பதிலாக எச். வினோத்தை சந்தித்து படம் பண்ணும் திட்டத்தை தீட்டி இருக்கிறார்.

இதனை உறுதிப்படுத்தும் விதமாக கமல், எச் வினோத்திற்கு கார் பரிசளித்து இருக்கிறார். பொதுவாகவே எச் வினோத் இயக்கிய படங்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் மாறுபட்ட கோணத்திலும் தான் இருக்கும். அதே சமயம் கமலுக்கும் இவர் எடுத்த படங்களின் மூலம் நம்பிக்கை இருப்பதால் இதற்கு உடனே ஓகே சொல்லிவிட்டார்.

இப்பொழுது கமல் KH234 படத்தை எச்.வினோத் தான் இயக்கப் போகிறார் என்பது முடிவாகிவிட்டது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் இந்த அதிரடி முடிவால் மணிரத்தினம் கொஞ்சம் டென்ஷன் ஆகி இருக்கிறார்.