1. Home
  2. கோலிவுட்

அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கமல்.. வித்யாசமான கதையில் உருவாகும் 233வது படம்

அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கமல்.. வித்யாசமான கதையில் உருவாகும் 233வது படம்
அஜித்தின் ஆஸ்தான இயக்குனருடன் முதல் முறையாக கமல் புதிய படத்தில் கூட்டணி போட இருக்கிறார்.

கமலஹாசன் இப்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த சூழலில் கமல் தனது அடுத்தடுத்த பட வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து கொண்டிருக்கிறார். தனது தயாரிப்பு நிறுவனம் மூலமும் நிறைய படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் ராஜ்கமலின் 51 வது படத்தில் கமலே நடிக்க இருக்கிறார். அதுவும் முதல்முறையாக அஜித் பட இயக்குனர் ஒருவருடன் கூட்டணி போட இருக்கிறார். அதிலும் குறிப்பாக படத்தின் கதை தான் வேற லெவலில் உருவாக இருக்கிறதாம். அதாவது கமலின் 233 வது படம் ஹெச் வினோத் கைவசம் சென்றுள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று ஹிட் படங்களை கொடுத்திருந்தார் வினோத். இப்போது சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட வினோத் உலக நாயகன் படத்தை இயக்க இருக்கிறார். சமீபத்தில் பாரம்பரிய நெல் பாதுகாப்பு உறுப்பினர்களை கமல் சந்தித்தார். அப்போது வினோத்தும் உடன் இருந்தார்.

அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது. மேலும் வினோத், கமல் கூட்டணி போட்டுள்ள படத்தின் கதை அரசியல் திரில்லர் படமாக உருவாக இருக்கிறதாம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி சுரேஷ் ஆகியோரும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

இப்போது வினோத் இதற்கான பணிகளில் மும்மரமாக இறங்கி உள்ளார். மேலும் இந்த வருடமே கமலின் 233 படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் வினோத்தின் முந்தைய படங்கள் எல்லாமே நுணுக்கமான விஷயங்களை கையாண்டு இருப்பார். முதல் முறையாக அரசியலை வைத்து எடுக்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

கமல், வினோத் படத்தை முடித்தவுடன் அடுத்தபடியாக இயக்குனர் மணிரத்தினத்துடன் கூட்டணி போட இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருக்கிறது. இந்நிலையில் ராஜ்கமல் நிறுவனம் மிக விரைவில் வினோத் கமல் கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

அஜித் பட இயக்குனருடன் கைகோர்க்கும் கமல்.. வித்யாசமான கதையில் உருவாகும் 233வது படம்
vinoth-kamal
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.