கமல் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு வெளிவர இருக்கும் இந்தியன் 2. நீண்ட வருடங்களாக உருவாக்கிக் கொண்டிருந்த இப்படம் தற்போது ஓரளவு முடிவுக்கு வந்திருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் கண்டிப்பாக வெற்றியை பார்க்க வேண்டும். என்று ஒவ்வொரு வேலையும் கவனமாக பார்த்து வருகிறார். அதனால் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் இப்படம் கிட்டத்தட்ட 90 சதவீதம் படபிடிப்பு முடிந்து விட்டது. அடுத்தபடியாக மே மாதத்தில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இந்தப் படத்தை எதிர்பார்த்தபடி நன்றாக நடித்து முடித்த பிறகு ஒரு ஓய்வு வேண்டுமென்று நினைக்கிறார். அதற்காக ஒரு மாதத்திற்கு அமெரிக்கா செல்ல இருக்கிறார்.
ஆனாலும் அந்த ஒரு மாத ஓய்வில் அடுத்த படத்திற்கு இவரை தயார்படுத்தி கொள்கிறார். அதாவது இவர் நடிக்க இருக்கும் படத்திற்கு ஏற்றபடி கெட்டப்பை மாற்றி சிகை அலங்காரத்தையும் மற்றும் முக சுருக்கங்களையும் அகற்ற இருக்கிறார். இதெல்லாம் எதற்காக என்றால் ஜூலை மாதம் அவருடைய அடுத்த படம் ஆரம்பிக்க இருக்கிறது. அதற்காகத்தான் இவ்வளவு விஷயங்களையும் செய்து வருகிறார்.
இந்தியன் 2 படத்திற்கு பிறகு மிகப் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்தினம் மற்றும் பா ரஞ்சித் இவர்கள் கூட்டணியில் தான் இவர் படம் நடிக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அந்த வகையில் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திற்கு சிறப்பு விருந்தினராக இவரை மணிரத்தினம் கூப்பிட்டு கௌரவித்திருந்தார்.
ஆனால் கமல் தற்போது இவர்களுக்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு அஜித்தின் இயக்குனரான எச் வினோத் உடன் கைகோர்க்க இருக்கிறார். இந்த விஷயம் இப்பொழுது நம்பக தகுந்த வட்டாரத்திலிருந்து அதிகாரப்பூர்வமான ஒரு அறிவிப்புடன் வெளிவர இருக்கிறது. அது மட்டுமில்லாமல் எச் வினோத்துக்கு, கமல் தனியாக ஒரு ஆபீஸ் அமைத்துக் கொடுத்து அத்துடன் ஒரு விலைமதிப்பு மிக்க கார் ஒன்றை வாங்கி பரிசாக கொடுத்திருக்கிறார்.
இவர் செய்வது எல்லாம் பார்த்தா மனசுக்குள் பெரிய கணக்கு போட்டு தான் காய் நகர்த்துகிறார் என்று நன்றாக தெரிகிறது. ஏனென்றால் விக்ரம் படத்திற்கு பிறகு இந்தியன் 2, அதன் பிறகு அதே அளவில் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் இயக்குனர்களில் ஒருவரான எச் வினோத் உடன் கூட்டணி வைக்கிறார். எதுவாக இருந்தாலும் சரி இவர் நினைத்தபடி வெற்றி கிடைத்தால் சந்தோசம் தான்.