1. Home
  2. கோலிவுட்

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்.. ஆண்டவரால் கம்பேக் கொடுக்கும் பாலிவுட் ஹீரோ

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் கமல் பட நடிகர்.. ஆண்டவரால் கம்பேக் கொடுக்கும் பாலிவுட் ஹீரோ
சிவகார்த்திகேயனின் படத்தில் வில்லனாக கமல் பட நடிகர் ஒப்பந்தமாகியுள்ளார்.

Sivakathikeyan: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் படம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பிரின்ஸ் தோல்வியால் துவண்டு போன சிவகார்த்திகேயன் மாவீரன் படம் 100% வெற்றி கொடுக்கும் என்ற உறுதியுடன் இருக்கிறார். அதேபோல் சமீபத்தில் மாவீரன் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தனது ராஜ்கமல் புரொடக்ஷனில் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இது அவருடைய 21வது படமாகும். சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்ற நிலையில் படக்குழு இப்போது சென்னை திரும்பி இருக்கிறது. இந்த சமயத்தில் கமல் படத்தில் நடித்த வில்லன் நடிகர் ஒருவர் சிவகார்த்திகேயனுக்கு இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாலிவுட்டில் மிகப்பெரிய நடிகர் தான் ராகுல் போஸ்.

இவர் கமல் நடிப்பில் வெளியான விஸ்வரூபம் 2 படத்தில் வில்லனாக நடித்திருப்பார். இந்த படத்தில் கமலைப் பழிவாங்கும் நோக்கில் சென்னைக்கு வந்து ஒற்றைக் கண்ணை மூடிக்கொண்டு தனது நடிப்பால் ரசிகர்களை ராகுல் போஸ் மிரள செய்திருப்பார். அதன் பிறகு தமிழில் ராகுல் போஸ் எந்த படத்திலும் நடிக்கவில்லை.

இப்போது கமல் இந்த படத்தை தயாரிப்பதால் ஆண்டவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ராகுல் போஸ் சிவகார்த்திகேயனின் 21வது படத்தின் மூலம் தமிழில் கம்பேக் கொடுக்கிறார். இதனால் இப்படத்தில் பயங்கரமான சண்டை காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராகுல் போஸ் மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுத்த விஷயம் தமிழ் ரசிகர்கள் தெரிந்து மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்திற்காக ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கும் நேரத்தில் பாலிவுட் நடிகர் இவரது படத்தில் இணைந்துள்ளது டபுள் ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.