1. Home
  2. கோலிவுட்

21 வருடத்திற்கு பின் ஒரே இடத்தில் சந்தித்த ரஜினி, கமலின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இந்த தலைமுறைல பார்க்க வாய்ப்பே இல்ல

21 வருடத்திற்கு பின் ஒரே இடத்தில் சந்தித்த ரஜினி, கமலின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இந்த தலைமுறைல பார்க்க வாய்ப்பே இல்ல
ஆரத் தழுவி கொண்ட ரஜினி, கமலின் லேட்டஸ்ட் புகைப்படம்

Kamal Haasan - Rajinikanth: எல்லாத் துறையில் உள்ள பிரபலங்களுக்குமே போட்டியாளர்கள் இருப்பது உண்டு. அதிலும் சினிமா துறை என எடுத்துக் கொண்டால் போட்டி மற்றும் பொறாமைகள் அதிகமாகவே இருக்கும். அதையும் தாண்டி சக கலைஞர்களிடம் நட்பு பாராட்டுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதை கமல் மற்றும் ரஜினி திறம்பட செய்து வருகிறார்கள்.

கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இருவருமே ஒரே நேரத்தில் வளர்ந்து வந்த ஹீரோக்கள் மட்டுமல்லாமல் சமகாலத்து போட்டியாளர்களும் கூட. எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டங்களில் கமல் ரஜினி என அடித்துக் கொள்ளாத கூட்டங்களே இல்லை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் தங்களுடைய நட்பை நாகரீகமாக வளர்த்து வந்தார்கள்.

கமலஹாசன் இதுவரை அவர் ஏறிய மேடைகளில் ரஜினியை பற்றி பேசாமல் இருந்ததே இல்லை. அதேபோன்று ரஜினி தன்னை தாழ்த்திக் கொண்டு கமலை எப்போதுமே உயர்வாக பேசுவார். இப்படிப்பட்ட இரண்டு ஜாம்பவான்கள் இன்று நேரில் சந்தித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி கொண்டு இருக்கிறது.

கமல் தற்போது இந்தியன் 2 சூட்டிங்கில் படு பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னை பிரசாத் லேபில் நடந்து கொண்டிருக்கிறது. ரஜினிகாந்த் ஜெயிலர் பட வெற்றிக்கு பிறகு ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் திருநெல்வேலி மற்றும் திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

21 வருடத்திற்கு பின் நடந்த நிகழ்வு

இந்தியன் 2 சூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே பிரசாத் ஸ்டூடியோவில் தான் தற்போது தலைவர் 170 ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை அறிந்த ரஜினி கமலிடம் உங்களை சந்திக்க வருகிறேன் என தகவல் சொல்லி இருக்கிறார். கமல் சற்றும் யோசிக்காமல் என் நண்பனே சந்திக்க நானே நேரில் வருகிறேன் என்று சொல்லி ரஜினி பட சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் அரங்கத்திற்கு காலை 8 மணிக்கு எல்லாம் சென்று விட்டாராம்.

பிரசாத் ஸ்டுடியோவில் நேரில் சந்தித்துக் கொண்ட ரஜினி மற்றும் கமல்

21 வருடத்திற்கு பின் ஒரே இடத்தில் சந்தித்த ரஜினி, கமலின் லேட்டஸ்ட் புகைப்படம்.. இந்த தலைமுறைல பார்க்க வாய்ப்பே இல்ல
Rajini kamal viral pic

கமலை சந்தித்தது ரஜினிக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. இருவரும் கட்டி அனைத்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 21 வருடத்திற்கு பிறகு இப்படி கமல் மற்றும் ரஜினி நடிக்கும் படத்தின் சூட்டிங் ஒரே இடத்தில் நடைபெற்று இருக்கிறது. தமிழ் திரை உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களான கமல் மற்றும் ரஜினி சந்தித்து கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.