நடிகர் சிம்பு நடித்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ லாஞ்சு நேற்று நடைபெற்றது. இதில் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நேற்றைய மேடையிலேயே கமல்-சிம்பு கூட்டணிக்கான அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது.
முன்பெல்லாம் கமலஹாசன் அவர்களை பொதுவாக எந்த நிகழ்ச்சிகளிலும் எளிதாக பார்த்து விட முடியாது. பிக்பாஸ் அவர் தொகுத்து வழங்குவதே அப்போது திரையுலகினருக்கு அதிர்ச்சியாக இருந்தது என்று சொல்லலாம். அதன் பின்னர் கடந்த 1 வருடங்களாக கமலை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடிகிறது. யூ டியூப் சேனல் விருது விழாவுக்கு கூட கமல் வந்திருந்தார்.
விக்ரம் பட ப்ரமோஷன் மற்றும் வெற்றி கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு பிறகு, கமல் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய கமல் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது கமலிடம், சிம்பு உங்கள் படம் எதாவது ஒன்றை ரீமேக் செய்து நான் நடிக்க நினைத்தால் எந்த படமாக இருக்கும் என்று கேள்வி கேட்டார் அதற்கு பதில் அளித்த கமல் நீங்கள் எல்லா படங்களிலும் நடிக்க வேண்டும் என்றும், என்னுடன் ஒரு படம் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். அப்போது தயாரிப்பாளர் ஐசரி கணேசன் அப்போது அந்த படத்தை நான் தான் தயாரிப்பேன் என்று கூறினார்.
மேலும் பேசிய ஐசரி கணேசன் வெந்து தணிந்தது காடு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை ரெட் ஜெயிண்ட் வாங்கியது போல, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உரிமையை கமலுடைய ராஜ் கமல் பிலிம்ஸ் வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கமலஹாசன் மௌனம் கலந்த சிரிப்பையே பதிலாக அளித்தார். இப்படி அந்த மேடையிலேயே சத்தமில்லாமல் கமல்-சிம்பு படத்திற்கான புதிய படத்தின் அறிவிப்பும், வெந்து தணிந்தது காடு படத்திற்கான வியாபாரமும் சத்தமில்லாமல் முடிந்தது.
வெந்து தணிந்தது காடு செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது. மேலும் இந்த படம் இரண்டு பாககங்களை கொண்டது எனவும் இயக்குனர் இயக்குனர் கௌதம் கூறியிருக்கிறார். இந்த படம் ஆசிரியர் ஜெயகாந்தனின் நாவலை தழுவியது.